எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மாணவர்களுடன் நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்தியார்த்தி கலந்துரையாடல்

0

ஆகஸ்ட் 5ல் காட்டாங்கொளத்தூர்  எஸ்ஆர்எம் கல்வி  நிறுவனத்திற்கு  நோபல் விருது பெற்ற கைலாஷ் சத்யார்தி வருகை. மாணவர்களுடன்  கலந்துரையாடுகிறார்.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சர்வதேச சமூக ஆர்வலர் முனைவர் கைலாஷ் சத்யார்திநாளை மறுநாள்(5.8.19) எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மாணவர்களுடன் இளைஞர்கள் மற்றும் இரக்கம் என்ற தலைப்பில்  உரையாடுகின்றார்.

புதுடெல்லியில் இயங்கி வரும் கைலாஷ் சத்யார்தி குழந்தைகள் அறக்கட்டளையின் நிறுவனரானமின் பொறியாளர் முனைவர் கைலாஷ் சத்யார்தி அமைதிக்கான  நோபல் பரிசு பெற்றவர்.  இவரதுஅறக்கட்டளை சமுதாயத்தில் பின்தங்கிய   குழந்தைகளின் நலனுக்காக செயல்பட்டு வரும்அமைப்பாகும்.  இந்தியா நேபாளம் வஙகாளதேசம் மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில்உள்ள சுமார் 83 ஆயிரம் குழந்தைகளின் கல்வி, மறுவாழ்வு உள்ளிட்ட பல்வேறு தேவைகள், குழந்தைகளின் பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளது. கைலாஷ் சத்யார்தி  உருவாக்கிய சமுதாயதனி உரிமைகள் நெட்வொர்க் மூலம் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தைகளுக்கு  எதிரானசெயல்களை வெளிக்கொணர்ந்து  குழந்தைகளின் உரிமைக்காக செயல்பட்டு வருகிறது. இதற்காக நிறுவனர் கைலாஷ்  சத்யார்திக்கு அமைதிக்கான  புகழ் பெற்ற நோபல் பரிசுவழங்கப்பட்டது.

நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்தி நாளை மறுநாள்  காலை  (05.08.2019 திங்கள் கிழமை) காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப  நிறுவனத்திற்குவருகை தருகிறார். நிறுவனத்தில் அமைந்துள்ள டி.பி.கணேசன் அரங்கில் எஸ்ஆர்எம் அறிவியல்தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் டாக்டர் பி.சத்தியநாரயணன் தலைமையில், துணைவேந்தர் முனைவர் சந்தீப் சன்சேத்தி, பதிவாளர் முனைவர் என்.சேதுராமன் முன்னிலையில்நடைபெறும் நிகழ்ச்சியில் முனைவர் கைலாஷ் சத்யார்தி பங்கேற்று இளைஞர்கள் மற்றும்இரக்கம் என்ற தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.