எம்.ஜி.ஆரின் போர்ப்படைத் தளபதி ஜேப்பியார்

0

ஜே.பங்கராஜ்’ என்ற பெயருடையவர் ஜேப்பியார் ஆன பின் முன்னேற்றம் கண்டார். ஜேப்பியார் தன் 85 வயதில் இன்று காலமானார்.
எம்.ஜி.ஆரின் போர்ப்படைத் தளபதிகளில் முக்கிய மாணவராக விளங்கியவர், அதிமுகவில் அதிகமுறை சிறை சென்றவர், அதிமுகவின் தூண்களில் ஒருவராக இருந்த ஜேப்பியார், எம்.ஜி.ஆர்., அமரரானபின் அரசியலிலிருந்து விலகி கல்லூரிகள் தொடங்கி, சத்யபாமா பல்கலைக் கழக வேந்தரானார்.
ஜேப்பியார் தலைமையில் 2008ல் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட போது அதன் குழுவில் ஒருவனாக விழா நடத்துவதில் ஆரம்பித்து, மலர் தயாரிப்பது வரை பல பணிகளைக் கவனிக்கும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதற்கு காரணம் கலைவாணரின் மருமகன் எஸ்.வரதராஜன்.
ஜேப்பியாரின் மறைவு எனக்கு மட்டுமல்ல, ஆயீரமாயிரம் எம்.ஜி.ஆர் ஆர்வலர்களுக்கு பேரிழப்பு.
-இதயக்கனி விஜயன்