எனக்கு என் கணவர் வேண்டும் – அவருடைய திருமணம் செல்லாது : பீட்டர் பாலின் முதல் மனைவி கோரிக்கை!

0

எனக்கு என் கணவர் வேண்டும் – அவருடைய திருமணம் செல்லாது : பீட்டர் பாலின் முதல் மனைவி கோரிக்கை!

வனிதா விஜயகுமார் – பீட்டர் பால் திருமணம் கடந்த 27-ம் தேதி கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது. இதையடுத்து அடுத்த நாளே பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், தனது கணவர் முறையாக விவாகரத்து பெறாமல் திருமணம் செய்து கொண்டதாக, மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். மேலும் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் பீட்டர் பால் ஒரு பெண் பித்தர், குடிகாரர் என்றும் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார்.

பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் கொடுத்த புகார் குறித்து விளக்கமளித்த வனிதா விஜயகுமார், சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும் பணத்திற்காக அவர் புகார் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில், எலிசபெத் ஹெலன் சமீபத்தில் இணைய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “நான் திருமணம் நடப்பதற்கு முன்பாகவே 19ம் தேதியே காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறேன்.

விவாகரத்து வாங்கும் வரை திருமணம் செய்ய மாட்டேன். 27-ம் தேதி அன்று கேக் மட்டும் வெட்டிக் கொள்கிறோம் என்று காவல்நிலையத்துக்கு வந்து எனது கணவர் பீட்டர் போலீசாரிடம் சொன்னார். ஆனால் கேக் எல்லாம் வெட்டக்கூடாது என்று போலீசார் அறிவுறுத்தினர். இப்போது ஷூட்டிங்குக்காக கேக் வெட்டியதாக சொல்லியிருக்கிறார்கள்.ஆனால் அவர்கள் இருக்கும் குடியிருப்பில் திருமணத்துக்காக அனைவரையும் அழைத்திருக்கிறார்கள். நான் ஒரு கோடி கேட்டேன் என்கிறார்கள். நான் பணத்தை எதிர்பார்க்கவில்லை. ஒரு கோடி கேட்டேன் என்பதற்கு ஆதாரம் உள்ளதா? நான் சட்டரீதியாக திருமணம் செய்திருக்கிறேன். இன்னும் விவாகரத்து செய்யவில்லை. அவர்கள் சட்டப்பூர்வமாக திருமணம் செய்தேன் என்று அவர்கள் சொன்னதற்கு ஆதாரம் என்ன உள்ளது?

எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று தான் ஊடகங்களிடம் விளக்கியுள்ளேன். எனக்கு என் கணவர் வேண்டும். நான் ஒரு தமிழ்ப் பெண். அவர் இல்லாமல் நாங்கள் இல்லை. அவருடைய திருமணம் செல்லாது” என்று கூறியுள்ளார்.

Also Read:

லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த வனிதா