எட்டெழுத்து பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி…

0

எட்டெழுத்து பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி…

நெல்லை மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனா். நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் உள்ள கோபாலகிருஷ்ணர் கோவிலில் 14ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா நடக்கிறது. இதையொட்டி அன்று காலையில் எட்டெழுத்து பெருமாள், சிவன், சிவசுப்பிரமணியர், பெரியபிராட்டி, இளைய பெருமாள், ஆத்தியப்பசுவாமி, ஆஞ்சநேயர், விநாயகர், முருகன், மாயாண்டி சித்தருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. மாலை 6 மணிக்கு கோசாலையில் உள்ள கோபால கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், கிருஷ்ண ஜெயந்தி விழாவும் நடக்கிறது. இந்த விழாவில் கிருஷ்ணருக்கு மண்பானையில் வெண்ணெய், நெய், முறுக்கு, அதிரசம், லட்டு, அல்வா, சீடை உள்ளிட்ட அனைத்து வகையான பண்டங்களும் படைக்கப்படும்.

இந்த விழாவை முன்னிட்டு இரண்டு மாதங்களுக்கு முன்னதாக ஸ்வாமிக்கு பலகாரங்கள் படைக்க மண்ணால் ஆனா கலயங்கள் மற்றும் பானைகள் 10008 எண்ணங்கள் தயார் செய்யப்பட்டு வர்ணங்கள் பூசப்பட்டு தயார் செய்யப்பட்டது. இந்த மண்பானை, கலயங்களில் கிருஷ்ணரின் உருவங்கள், சங்கு சக்கரம், ராமநாமம் உள்ளிட்ட படங்கள் வரையப்பட்டு உள்ளன. அந்த பானைகளில் இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பலகாரங்கள் நிரப்பப்பட்டு ஸ்வாமிக்கு படைக்கப்பட்டது .மாலையில் நடந்த விழாவில் கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை மற்றும் கோசாலை பசுக்களுக்கு பூஜையும் நடைபெற்றது தொடர்ந்து கலயங்களில் நிரப்பப்பட்ட வெண்ணையை ஊர் சுற்றி வந்து மகா தீபாராதனை காட்டப்பட்டு பூஜையில் கலந்து கொண்டவர்களில் மீது வெண்ணை பூசப்பட்டது பின்னர் பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதமாக வர்ணம் பூசப்பட்ட கலயங்களில் அப்பம் முறுக்கு அதிரசம்l போன்றவைகள் வழங்கப்பட்டது .