எச்சரிக்கை! சோஷியல் மீடியாவில் புதிய மோசடி!

0
4

எச்சரிக்கை! சோஷியல் மீடியாவில் புதிய மோசடி!

கடந்த சில நாட்களாக, ஒருவரது ஃபேஸ்புக் ஐடியை போலியாக உருவாக்கி, அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இருக்கும் அவரது நண்பர்களிடம், மெசஞ்சர் மூலம் சாட் செய்து பணம் கேட்கும் மோசடியை மர்ம கும்பல் நடத்தி வருகிறது.

இந்த மோசடியால் பலர் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வருகிறது.

எனவே, உங்களது நண்பர்கள் யாராவது, ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் உங்களிடம் பணம் கேட்டால், உடனே அந்த நண்பரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுங்கள். எக்காரணம் கொண்டும் சாட் மூலம் பணம் கேட்பவர்களுக்கு, உடனே கூகுள் பேய் உள்ளிட்டவைகள் மூலம் பணம் அனுப்பி விடாதீர்கள்.

மக்களே எச்சரிக்கையாக இருங்கள்.