எங்களால் பார்க்க முடியாவிட்டாலும், எங்களை சாமி பார்த்திருப்பார் – மனம் உருகிய மாணவ, மாணவிகள்

0

எங்களால் பார்க்க முடியாவிட்டாலும், எங்களை சாமி பார்த்திருப்பார் – மனம் உருகிய மாணவ, மாணவிகள்

அத்திவரதரை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து, காஞ்சிபுரம் வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆந்திர மாநிலம் திருச்சானூரை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தில் இருந்து 57  மாணவ மாணவிகள், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்றனர். அவர்கள் தனி வழியில் சென்று சாமி தரிசனம் செய்ய போலீசார் ஏற்பாடு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த மாணவ, மாணவிகள், தாங்கள் அத்தி வரதர் சுவாமியை, கண்ணால் காணவில்லை என்றாலும், சுவாமி எங்களை பார்த்து இருப்பார் என தெரிவித்தது நெஞ்சை நெகிழ வைப்பதாக இருந்தது.