ஊரடங்கை மீறி செயல்பட்ட கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

0

ஊரடங்கை மீறி செயல்பட்ட கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

திருப்பூரில் சுய ஊரடங்கு தினமான இன்று திறக்கப்பட்டிருந்த கடைகளுக்கு வட்டாட்சியர் சீல் வைத்தார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் இன்று ஒரு நாள் மக்கள் ஊரடங்கு முறையை கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தலை அடுத்து, தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்நிலையில் திருப்பூர் குமரன் சாலையில் நீக்கப்பட்டு இருந்த விளையாட்டு உபகரணங்கள் கடைக்கு திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் சீல் வைத்தார்.

பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அதனை அந்தந்த வட்டாட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆய்வு மேற்கொண்ட வட்டாட்சியர் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.