ஊரடங்கு பற்றி வெளியான தகவல் வெறும் வதந்தி – சென்னை மாநகராட்சி விளக்கம்

0
18

ஊரடங்கு பற்றி வெளியான தகவல் வெறும் வதந்தி – சென்னை மாநகராட்சி விளக்கம்

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1 லட்சத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 3645 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிறகு படிப்படியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அரசு தெரிவித்திருந்த நிலையில் இன்று மதியம் தலைமை செயலருடன் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்த இருக்கின்றனர்.

இந்நிலையில் தேர்தலுக்கு பின்னர் ஊரடங்கு விதிக்கப்பட இருப்பதாக சமூகவலைதளங்களில் தீயாக தகவல் பரவி வருகிறது. மேலும் சென்னை கார்ப்பரேஷன் தயாரித்தது போல் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு அதில் பொதுமுடக்கம் விரைவில் அமல்படுத்தப்பட இருப்பதாகவும், எந்தப் பணிகளுக்கு அனுமதி, எவற்றிற்கெல்லாம் தடை விதிக்கப்படும் என்ற தகவல்களை உருவாக்கி சோஷியல் மீடியாவில் ஒரு சிலர் பரப்பி வருகின்றனர்.

இத்தகவலை சென்னை மாநகராட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இது வெறும் வதந்தி என்றும் யாரும் நம்ப வேண்டாம் என்றும் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அதிகாரப்பூர்வ தகவல்களை தெரிந்து கொள்ள சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை பின் தொடருங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.