ஊரடங்கில் ஸ்ரேயா கணவருடன் நடுரோட்டில் ஆட்டம் –  வைரலாகும் வீடியோ!

0

ஊரடங்கில் ஸ்ரேயா கணவருடன் நடுரோட்டில் ஆட்டம் –  வைரலாகும் வீடியோ!

தமிழில், மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விக்ரமின் கந்தசாமி, ஜீவாவின் ரௌத்ரம் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரேயா. இந்தி, தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு ஸ்ரேயா கணவருடன் பார்சிலோனாவில் வசித்து வருகிறார்.

சமீபத்தில் ஸ்ரேயாவின் கணவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததாகவும், தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்ததாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் ஸ்ரேயாவும் அவரது கணவரும் பார்சிலோனா நகரில் நடுரோட்டில் மாஸ்க் எதுவும் அணியாமல் நடனம் ஆடியுள்ளனர்.

மேலும் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டான்ஸ் மாஸ்டர்களுக்கு நன்றிகூறி பகிர்ந்துள்ளார்.

பார்சிலோனாவில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் ஸ்ரேயா நடுரோட்டில் கணவருடன் நடனமாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.