உலகில் அதிகம் சம்பாதிக்கும் நடிகைகளின் பட்டியலில் தீபிகா படுகோனே இடம் பெறவில்லை

0

உலகில் அதிகம் சம்பாதிக்கும் நடிகைகளின் பட்டியலில் தீபிகா படுகோனே இடம் பெறவில்லை

உலகில் அதிகம் சம்பாதிக்கும் நடிகைகளின் பட்டியலில் கடந்த ஆண்டு 10-ம் இடம் பிடித்த நடிகை தீபிகா படுகோனே, இந்த ஆண்டு பட்டியலிலேயே இடம் பெறவில்லை.

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டுதோறும், அதிகம் சம்பாதிக்கும் நடிகைகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் கடந்த ஆண்டு 10-ம் இடத்தில் இருந்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இந்த ஆண்டு ஹாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தபோதும், இப்பட்டியலில் இடம்பெறத் தவறிவிட்டார். “லா லா லேண்ட்” திரைப்படத்தில் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்ற எம்மா ஸ்டோன் இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த ஜெனிஃபர் லாரன்ஸைப் பின்தள்ளி முதலிடம் பிடித்துள்ள, நடிகை எம்மா ஸ்டோன், இந்திய ரூபாய் மதிப்பில் 166 கோடியே 55 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்.