உங்கள் வருகையை இந்தியா எதிர்நோக்கி இருக்கிறது, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு பிரதமர் மோடி 

0

உங்கள் வருகையை இந்தியா எதிர்நோக்கி இருக்கிறது,
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு பிரதமர் மோடி
 

புதுதில்லி, பிப்ரவரி 24, 2020

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவில் 2 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொள்ள இருப்பதையொட்டி, “அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களே, உங்களது வருகையை இந்தியா எதிர்நோக்கியிருக்கிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “உங்களது பயணம் நம் நாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது உறுதி. மிக விரைவில் உங்களை அகமதாபாத்தில் சந்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்று (24.02.2020) அகமதாபாத் வந்தடையும் அதிபர் டொனால்டு டிரம்ப், அங்கு மோதேரா விளையாட்டரங்கில் நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்பதுடன், சபர்மதி ஆசிரமத்திற்கும் செல்கிறார்.

மாலையில் அவர் புதுதில்லி வந்தடைகிறார். பிரதமருடன் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறித்து அவர் விரிவான பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

@narendramodi

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களே, உங்களது வருகையை இந்தியா எதிர்நோக்கியிருக்கிறது!

 உங்களது பயணம், நம் நாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது உறுதி.

மிக விரைவில் உங்களை அகமதாபாத்தில் சந்திக்கிறேன்

@realDonaldTrump

மெலானியாவுடன் இந்தியாவிற்கு புறப்படுகிறேன்