இளையதளபதி விஜய் நடிக்கும் மெர்சல் படத்தின் நீதானே மெலடி பாடல் வெளியீடு

0
1443

இளையதளபதி விஜய் நடிக்கும் மெர்சல் படத்தின் நீதானே மெலடி பாடல் வெளியீடு

தெறி படத்திற்குப் பிறகு அட்லீ – இளையதளபதி விஜய் கூட்டணி இணைந்துள்ள படம் மெர்சல். விஜய் மூன்று வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக, சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடிக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் படத்தில் வடிவேலு நடிக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்தப் படம், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100-வது படமாகத் தயாராகி வருகிறது. படத்தின் இசை வெளியீடு வரும் 20ம் தேதி நடைபெறுகிறது. படத்தின் சிங்கிள் டிராக் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் நீதானே என்ற மெலடி பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.