இரு தொகுதி இடைத்தேர்தலின் வெற்றி உண்மைக்கு கிடைத்த வெற்றி : மகிழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி

0

இரு தொகுதி இடைத்தேர்தலின் வெற்றி உண்மைக்கு கிடைத்த வெற்றி : மகிழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி

சென்னை, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 20 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில் அதிக வாக்குகளை பெற்ற அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 44,782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாங்குநேரியில் 12வது சுற்றில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 55,862 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்று உள்ளார்.

இதை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவருக்கு தொண்டர்கள் பூங்கொத்து, இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அங்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2021 தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டம் இது. வாக்களித்த மக்களுக்கு மனமார்ந்த நன்றி. கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றி.

தொண்டர்களின் உழைப்பால் பெற்ற வெற்றி இது. 2 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலையில் உள்ளது. இது உண்மைக்கு கிடைத்த வெற்றி.

“உண்மை, தர்மம், நீதி எப்போதும் வெல்லும்!” இதே கூட்டணி வரும் தேர்தலிலும் தொடரும்.

முரசொலி அலுவலக கட்டிடம் உள்ள இடம் பஞ்சமி நிலமாக இருந்தால் அரசு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் என கூறினார்.