“இமயமலையில் ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன” – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

0

“இமயமலையில் ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன” – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

நடிகர் என்பதை விட ஆன்மீகவாதி என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன் என சூப்பர் ஸ்டார்  ரஜினி கூறியுள்ளார்.

சென்னை, மறைந்த ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தரின் ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகளுடன் வெளிவந்த ‘தி டிவைன் ரொமான்ஸ்’ என்ற ஆங்கில புத்தகம் தமிழில் ‘தெய்வீகக் காதல்’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.

இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா ‘யோகதா சத்சங் சொசைட்டி ஆப் இந்தியா’ என்ற ஆன்மிக தொண்டு நிறுவனத்தின் சார்பில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கிவைத்தார். அப்போது ‘தெய்வீகக்காதல்’ என்ற ஆன்மீக தமிழ்மொழி பெயர்ப்பு புத்தகத்தை வெளியிட்டார்.

அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியதாவது:

# “மனித ஜென்மம் கிடைப்பதே அரிது”

# சினிமா நட்சத்திரம் என்பதைவிட ஆன்மீகவாதி என்பதில் பெருமையடைகிறேன்.

# ஆன்மீக “பவரை” விரும்புகிறேன்.

# ரஜினிகாந்த் குழப்புகிறார் என்கிறார்கள் சிலர். நான் குழப்பவாதி இல்லை. ஆன்மீகப் பாதையில் என் முதல் குரு அண்ணன் சத்யநாராயணா.

# என்னுடைய முதல் குரு சச்சிதானந்தர். ராமகிருஷ்ண பரமஹம்சர் எனது 2- வது குரு.

# சினிமாவில் சொல்வது மக்களை விரைவில் சென்றடையும்.

# ஆன்மீக புத்தகங்களை படிப்பதில் எப்போதும் ஆர்வம் உண்டு.

# பாபா படத்தில் நஷ்டம் அடைந்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்தேன்.

# இமயமலையில் ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன.

# ஆன்மீகவாதி என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன்.

# தொழில்நுட்பக் கருவிகளைப் போன்றது நமது உடல்.

# எனது ஆன்மீகத்தேடல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

# பணம், புகழ், ஆன்மீக, இவற்றில் எது வேண்டும் என்றால் ஆன்மீகம் தான் வேண்டும் என்பேன்.

# ஆன்மீகத்தால் அதிகமாக சக்தி கிடைக்கும் என்பதால் தான் அது மிகவும் பிடிக்கும்.

# சச்சிதானந்தர் மறைவுக்கு பின் பல்வேறு குருக்களை பின்பற்றி வந்திருக்கிறேன்.

# நமது உடல் மனதுக்கு ஆன்மீக பலன்கள் தேவைப்படுகிறது.

# ஆண்டவன் வருவதற்கு மனதை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

# நல்லது கெட்டதை அறிந்தவர்கள் நாம்.ஆனால் செய்ய தயங்கிறோம்.

# ஆழ்மனது ஆன்மீகத்தையே தேடுவதை உணர்ந்தேன்.

# ராகவேந்திரரிடம் ஆன்மீகத்தை கற்றுக்கொண்டேன்.

# விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார்.