இந்திய அமெரிக்க கலாச்சார பரிமாற்றம்

0

பெருமைமிகு SRM பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக 1993ல் தொடங்கப்பட்ட SRM உணவக மேலாண்மைக் கல்வி நிறுவனம் இத்துறையில் நாட்டின் முதன்மைக் கல்வி நிறுவனமாக விளங்குவதாகும். மாணவர்களுக்கு இனிமையான கல்விச் சூழலையும் உள்ளார்ந்த கற்பித்தலையும் எப்பொழுதும் வழங்குகிறது. மேலும் இந்நிறுவனம் அவர்கள் தம் திறன்களை நன்கு வளர்த்துக் கொள்ளும்வகையில் பயிற்சி அளிப்பதில் சிறப்பாக வளர்ந்தோங்கிப் புகழுடன் விளங்குகிறது.
இந்த நிறுவனம், சென்னை, திருச்சி, சிக்கிம், தில்லி ஆகிய இடங்களில் இயங்குகிறது. நல்ல உள்கட்டமைப்புகள், புதுமைக் கருவிகள், திறனுறு வகுப்பறைகள், புதுவகை ஆய்வகங்கள், மேம்படுத்தப்பட்ட நூலகம், நிறுவனத்துடன் இணைந்த நட்சத்திர உணவகம் ஆகியவை இந்நிறுவனத்தில் உள்ளன. இந்த ஏந்துகள் மாணவர்கள் கைமேல் பயனாகப் பயிற்சிபெற்றுத் தங்கள் திறமையையும் அறிவையும் வளர்த்துக் கொள்ளப் பெரிதும் உதவும் வகையில் செய்யப்பட்டுள்ளன.
எஸ்.ஆர்.எம் உணவக மேலாண்மை நிறுவனம் கலிஃபோர்னியா சான்டா பார்பராவின் வெஸ்ட்மோண்ட் பல்கலைகழகத்துடன் 16 ஜீலை 2016– ல் செய்த கலாச்சார பரிமாற்றத்தை பெருமையுடன் அறிவிக்கிறது.
அமெரிக்காவின் கலை கல்லூரிகளில் மிகச் சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக 1937 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வெஸ்ட்மோண்ட் கல்லூரி திகழ்ந்து கொண்டிருக்கிறது.
2014 ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தத்திற்கு மேலாக இம்முறை எஸ்.ஆர்.எம் உணவக மேலாண்மை கல்லூரியின் சமையல் வல்லுநர்களால் இந்திய உணவின் செயல்முறை விளக்கம் நடைபெற்றது.
இம்முறை இந்தியாவிற்கு வெஸ்ட்மோண்ட் பல்கலைகழகம் காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகரின் முதியோர்களுக்கு உதவவும் மற்றும் பல மனிதநேய உதவிகளை புரிவதும் அவர்களது உதாரணத்துவமான மனிதநேய குணத்தையும், தன்மையையும் எடுத்துரைக்கிறது.
இந்த பரிமாற்றம் வெஸ்ட்மோண்ட் பல்கலைகழகம் மற்றும் எஸ்.ஆர்.எம் உணவக மேலாண்மை கல்லூரி மாணவர்கள் இடையே ஒரு கனிவான அனுபவத்தை ஏற்படுத்தியது என்பதில் ஐயமில்லை.