இந்தியாவில் வாழக் கூடிய நகரங்கள் பட்டியலில் சிங்காரச் சென்னைக்கு 4ம் இடம்!
இந்தியாவில் வாழ மிக ஏற்ற நகரங்கள் பட்டியலை மத்திய வீட்டு வசதித்துறை மற்றும் நகர விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று வெளியிட்டார். இதில் இந்தியாவிலேயே வாழக்கூடிய சிறந்த நகரமாக பெங்களூரு முதல் இடத்தை பிடித்துள்ளது. இப்பட்டியலில் சென்னைக்கு 4ம் இடம் கிடைத்துள்ளது.
10 லட்சத்துக்கு மேற்பட்டோர் வசிக்கும் நகரங்கள் மற்றும் 10 லட்சத்துக்கும் குறைவானோர் வசிக்கும் நகரங்கள் என இரண்டு வகையாக பிரித்து ‘வாழக் கூடிய நகரங்கள் பட்டியல் 2020 (EoLI 2020)’ பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் நகரங்கள் பட்டியல் மொத்தம் 49 நகரங்களை கொண்டுள்ளது. இதில் இந்தியாவிலேயே சிறந்த நகரமாக பெங்களூரு முதலிடத்தை பிடித்துள்ளது.
புனே நகரம் 2ம் இடத்தையும், அகமதாபாத் 3ம் இடத்தையும், தமிழகத்தின் தலைநகரமான சிங்காரச் சென்னை 4ம் இடத்தையும் பிடித்துள்ளன. இதே பட்டியலில் சூரத் 5ம் இடத்தையும், நவி மும்பை 6ம் இடத்தையும், கோயமுத்தூர் 7ம் இடத்தையும், வதோதரா 8ம் இடத்தையும், இந்தூர் 9ம் இடத்தையும், பெருநகர மும்பை 10ம் இடத்தையும் பிடித்துள்ளன.
இப்பட்டியலில் டெல்லி 13ம் இடத்தையும், ஸ்ரீநகர் கடைசி இடத்தையும் பெற்றுள்ளன.
Population more than million | Top 10 cities
1. Bengaluru
2. Pune
3. Ahmedabad
4. Chennai
5. Surat
6. Navi Mumbai
7. Coimbatore
8. Vadodara
9. Indore
10. Greater Mumbai
அதே நேரத்தில் 10 லட்சத்துக்கும் குறைவானோர் வசிக்கும் பட்டியல் மொத்தம் 62 நகரங்களை கொண்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 3 நகரங்கள் இடம்பிடித்துள்ளன. இப்பட்டியலில் Muzaffarpur கடைசி இடத்தை பெற்றுள்ளது.
Population less than million | Top 10 cities
1. Shimla
2. Bhubaneshwar
3. Silvassa
4. Kakinada
5. Salem
6. Vellore
7. Gandhinagar
8. Gurugram
9. Davangere
10. Tiruchirapalli
நகராட்சி செயல்திறன் அட்டவணை:
மத்திய அரசு வெளியிட்டுள்ள நகராட்சி செயல்திறன் அட்டவணையில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கும் நகராட்சிகளின் பட்டியலில் இந்தூர் முதல் இடத்தையும், சூரத் 2ம் இடத்தையும் போபால் 3ம் இடத்தையும் பிடித்துள்ளன.
10 லட்சத்துக்கும் குறைவானோர் வசிக்கும் நகராட்சிகளின் பட்டியலில் புதுடெல்லி முதல் இடத்தை பிடித்துள்ளது. இப்பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 3 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
‘Municipal Performance Index’ Population less than million | Top 10 cities
1. New Delhi
2. Triputi
3. Gandhinagar
4. Karnal,
5. Salem
6. Tiruppur
7. Bilaspur
8. Udaipur,
9. Jhansi
10. Tirunelveli