இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் மின்சார வசதி: பியூஷ் கோயல்

0

மாநில மின்சார அமைச்சர்களுடன் இரண்டு நாட்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு மத்திய மின்சாரத்துறை மந்திரி பியூஷ் கோயல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறுகையில், மாவோயிஸ்ட்களின் ஊடுருவல்கள் உள்ள பகுதி, நாட்டில் மின்சார வசதிகள் இல்லாத கிராமங்கள் அனைத்திற்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் மின்சார வசதி ஏற்படுத்தி தரப்படு என்றும், இதற்கான இலக்கை 2017 மே மாதத்தி்ல் இருந்து 2016 டிசம்பராக தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, பிரதமர் நரேந்திர மோடி வரும் 2018-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் மின்சார வசதி ஏற்படுத்தி தரப்படும் என அறிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.