இந்தியர்களை வெளியேற்றி அழைத்து வந்தமைக்கு ஏர் இந்தியாவுக்கு பிரதமர் பாராட்டு

0

இந்தியர்களை வெளியேற்றி அழைத்து வந்தமைக்கு ஏர் இந்தியாவுக்கு பிரதமர் பாராட்டு

கோவிட் – 19 தீவிர நோய்த் தொற்று பாதிப்பு சூழ்நிலையில் வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை வெளியேற்றி அழைத்து வந்தமைக்காக ஏர் இந்தியாவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “துணிசச்சலை வெளிப்படுத்தி, மனிதாபிமானத்தை வெளிக்காட்ட வேண்டிய தருணத்தில் கை கொடுத்த ஏர் இந்தியா (@airindiain) நிறுவனத்தின் குழுக்கள் குறித்து மிகுந்த பெருமை அடைகிறேன். தனித்துவமான அவர்களுடைய முயற்சிகளுக்கு நாடு முழுக்க ஏராளமான மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர் என்று கூறியுள்ளார். #IndiaFightsCorona”