இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணியில் தமிழக வீர‌ர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளனர்

0
20

இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணியில் தமிழக வீர‌ர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளனர்

சென்னை, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் குறித்த அறிவிப்பை பிசிசிஐ புனேயில் வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி வீர‌ர்கள் பெயர்கள் பட்டியலில்

தமிழக வீர‌ர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோஹித் சர்மா, தவான், சுப்மான் கில், ஷ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், யுவேந்திர சஹால், குல்தீப் யாதவ், க்ருனால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், நடராஜன், புவனேஷ்வர் குமார், சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்குர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மூன்று போட்டிகளை விளையாடவுள்ளது.

வரும் 23-ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி 26-ம் தேதியும், மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி 28-ம் தேதியும் நடைபெறவுள்ளது.