ஆஸ்கர் விருது பெற்ற இயக்குனர் என்னை கொடூரமாக பலாத்காரம் செய்தார்- நடிகை பரபரப்பு புகார்

0

ஆஸ்கர் விருது பெற்ற இயக்குனர் என்னை கொடூரமாக பலாத்காரம் செய்தார்- நடிகை பரபரப்பு புகார்

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ரோமன் போலன்ஸ்கி. இவர் இயக்கிய பல படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. தி பியானிஸ்ட் படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்றுள்ளார். ரோமன் தன்னுடன் ஒரு படத்தில் நடித்த ‌ஷரன் டேட் என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். 1970-ம் ஆண்டு லண்டன் சென்ற போது ஒரு கலவரத்தில் தனது 8 மாத கர்ப்பிணி மனைவியை பறிகொடுத்தார்.

இதனை தொடர்ந்து 1977-ம் ஆண்டு பதிமூன்று வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக அவரை கைது செய்ய போலீஸ் தேடியதும், ஐரோப்பா சென்று லண்டன் நகரத்தில் வசிக்க ஆரம்பித்தார். அந்த வழக்கில் அமெரிக்க போலீஸ் ரோமன் போலன்ஸ்கியை தேடி வருகிறது. பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து ஆஸ்கர் அகாடமியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். ரோமன் போலன்ஸ்கி தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் ரோமன் போலன்ஸ்கி மீது பெண் ஒரு பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். சுவிட்சர்லாந்தை சேர்ந்த அவர், 1975-ம் ஆண்டு தனக்கு 18 வயதாக இருந்தபோது அங்குள்ள ரிசார்ட்டில் வைத்து ரோமன் போலன்ஸ்கி தன்னை கொடூரமாக பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

தற்போது 60 வயதை கடந்துள்ள மோன்னியர் என்ற அந்த பெண் பிரெஞ்சின் லி பாரீசியன் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார். இயக்குனர் ரோமன் போலன்ஸ்கியின் ஜே அக்யூஸ் என்ற படம் அடுத்த வாரம் பிரான்சில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் 40 ஆண்டுகள் கழித்து மோன்னியர், ரோமன் போலன்ஸ்கி தன்னை பாலியல் பலாத்காரம் செய்த தகவலை தெரிவித்திருக்கிறார்.