‘அலாதி அன்பிருந்தால் அனாதை யாருமில்லை’ – வைரலாகும் கமலின் கொரோனா விழிப்புணர்வு பாடல்

0

‘அலாதி அன்பிருந்தால்
அனாதை யாருமில்லை’ – 
வைரலாகும் கமலின் கொரோனா விழிப்புணர்வு பாடல்

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல் கொரோனா விழிப்புணர்வு குறித்து பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலை இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கமல் எழுதியுள்ள இந்தப் பாடலை கமல் , ஷங்கர் மகா தேவன், அனிருத், ஆண்ட்ரியா, சித் ஸ்ரீராம், சித்தார்த், யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்டோர் இணைந்து பாடியுள்ளனர்.

“பொது நலமென்பது தனி மனிதன் செய்வதே. தன் நலமென்பதும் தனி நபர்கள் செய்வதே. அலாதி அன்பிருந்தால் அனாதை யாருமில்லை”, எனத் தொடங்கும் இந்தப் பாடல் முழுவதும் ஊரடங்கு காலத்தில் ஆதரவற்றோர், அமைப்பு சாரா தொழிலாளர்கள் எப்படி பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்தும் விதமாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மக்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. போக்குவரத்து முடக்கப்பட்டதால் வெளி மாநிலத்தவர்கள் நடைபயணமாக அவர்களின் சொந்த ஊருக்கு சென்றது போன்ற காட்சிகளால் பிண்ணி பிணைந்திருக்கிறது இந்தப் பாடல்.

அன்பை முன்னிருத்தும் வகையில் இந்த பாடலில் சரிசமம் என்றிடும் முன்பு உனைச்சமம் செய்திடப்பாரு சினையுறும் சிறு உயிர் கூட உறவென புரிந்திடபாரு  உள்ளிட்ட வரிகள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.