அரசு காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த 159 பேர் முதன் முறையாக வாக்களிப்பு!

0

அரசு காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த 159 பேர் முதன் முறையாக வாக்களிப்பு!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த 159 பேர் முதன் முறையாக ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் 2ம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தொடர்ச்சியாக தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர் இந்நிலையில் 103 ஆண் வாக்காளர்களும் 56 பெண் வாக்காளர்களும் வாக்களித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கீழ்ப்பாக்கம் மனநல காப்பக்கத்தின் இயக்குநர் பூர்ண சந்திரிகா, மனநல பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் வாக்களிக்க வாய்ப்புக் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.