அரசியலில் குதிக்கும் திவ்யா சத்யராஜ்

0

அரசியலில் குதிக்கும் திவ்யா சத்யராஜ்

சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் விரைவில் அரசியலில் இறங்கவிருக்கிறார். ஊட்டச்சத்து நிபுணரான இவர் பல சமூக நலத் திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

” அரசியல்வாதிகள் எண்ணம் எல்லாம் ‌பேனர் கட்டுவதிலும், போஸ்டர் ஒட்டுவதிலும்தான் இருக்கிறது. மக்கள் தேவைகளை புரிந்து கொள்வதில்லை. நாம் ஒரு அமைப்பை மேம்படுத்த வேண்டும் என்றால், அந்த அமைப்பில் இருந்தால்தான் அதை செயல்படுத்த முடியும். மக்களின் தேவைகளை புரிந்து கொள்வதற்கான வேலையில் ஈடுபட்டு இரண்டு வருடங்கள் ஆகிறது. ஆகவே, நான் அரசியலுக்கு வருவதன் மூலம் சமூக நலத்திட்டங்கள் சிறப்பாக செய்ய முடியும் என்று நம்புகிறேன். எனது தந்தை, தாய் இருவரும் எனக்கு எப்போதும் ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஆனால் நான் சுயமாக சிந்திக்கக் கூடிய பெண். எனது பணியை ஆரம்பித்தபோது அப்பாவின் பெயரையோ அந்தஸ்தையும் எனது வளர்ச்சிக்காக பயன்படுத்தியதில்லை. அவரை எனது அரசியல் வளர்ச்சிக்கும் பயன்படுத்த மாட்டேன் ” என்று சொன்னார் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ்.