அய்யோத்தியில் ராமர் கோவில் கட்டலாம்! உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு!!

0

அய்யோத்தியில் ராமர் கோவில் கட்டலாம்! உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு!!

மதம் மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டு தீர்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும்; ஒரு பிரிவினரின் நம்பிக்கையை மற்றோரு பிரிவினர் தொந்தரவு செய்யக்கூடாது!”

5 பேர் கொண்ட அமர்வின் அனைத்து நீதிபதிகளும் ஒருமித்த கருத்தாக தீர்ப்பு

கோயில் கருவறை தான் ராமஜென்ம பூமி என்பதை மத நம்பிக்கை அடிப்படையில் ஏற்கிறோம்….

இஸ்லாமியர்கள் தங்களது தொழுகைகளை கட்டாயம் மசூதியில் தான் நடத்த வேண்டும் என்பதில்லை. தொழுகை நடத்த மசூதி அவசியல் இல்லை என இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள்:

அயோத்தியில் ராம பிரான் பிறந்ததாக கருதப்படுகிறது. வரலாற்று பூர்வமான ஆதாரங்கள் மற்றும் பண்டைய சமஸ்கிருத நூல்கள் அயோத்தியை ‘பிறந்த இடம்‘ அல்லது ‘ஜென்மபூமி’ என்று பல இடங்களில் குறிப்பிடுகின்றன. 5-ம் நூற்றாண்டிற்கு பிறகு அயோத்தி வனாந்திரமாக மாறியது என்று அரசிதழ் ஆவணங்கள் கூறுகின்றன. மாமன்னர் பாபரின் ஆணைக்கிணங்க, அவரின் தளபதி ஒருவரால் 1528-ல், பாபர் மசூதி கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதைப்பற்றி ஒரு கல்வெட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் பல இதர நூல்கள் ஜென்மபூமியை (ராமர் பிறந்த இடம்) பற்றி குறிப்பிடும் அதே வேளையில் மசூதி பற்றி பேசுவதில்லை. வேறு சில ஆதாரங்கள், இந்த மசூதியை அவுரங்கசீப் கட்டியதாக சொல்கின்றன. 1766-ல் அந்த பகுதியில் பயணம் செய்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார் எழுதிய குறிப்புகளில் இப்படி கூறப்பட்டுள்ளது.
மசூதி பற்றிய மிக பழைய குறிப்புகள், முதலாம் பகதூர் ஷா ஜாபர் பற்றி அவரின் மகள் (அவுரங்கசீப்பின் பேத்தி) எழுதிய நூலில் உள்ளது.
மோதல்கள் பற்றிய மிகப் பழைய தரவுகள் 1850-களை சேர்ந்தவை. அப்போது இந்துக்கள் ஒரு குழுவாக பாபர் மசூதியை தாக்கினர். அதன் பிறகு அவ்வப்போது நடைபெற்ற மோதல்கள் பற்றிய தரவுகள் உள்ளன. இந்த மோதல்கள், 1980-களில் தான் பெரிய அளவுக்கு உருவெடுத்து, 1992 டிசம்பர் மாதம் 6-ந் தேதி அன்று பாபர் மசூதி இடிப்பில் முடிந்தது.
அதன் பிறகு நீதிமன்றங்களுக்கும், பேச்சுவார்த்தை மேசைகளுக்கும் இந்த பிரச்சினை நகர்ந்தது. ஆனால் ஒரு தீர்வும் எட்டப்படவில்லை. ஓய்வு பெற சில நாட்களே உள்ள சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பதை பற்றி இறுதி தீர்ப்பை அளிக்க இருக்கும் நிலையில், மோதலில் உள்ள பல்வேறு சமூகத்தினரால் புனித பூமியாக கருதப்படும் இந்த நிலத்தின் வரலாறு பற்றிய தொகுப்பு இது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமி பகுதியில் சுமார் 2.77 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரியதாக இருந்தது. இந்த நிலத்தை சன்னி வக்பு போர்டு, நிர்மோகி அகாரா, ராம்லல்லா ஆகிய மூன்று அமைப்புகளும் சொந்தம் கொண்டாடி வந்தன. இது தொடர்பாக ஆரம்பத்தில் பல ஆண்டுகளாக அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. கடந்த 2010-ம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதாவது சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று அமைப்புகளும் சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அது. ஆனால், அலகாபாத் கோர்ட்டு தீர்ப்பை மூன்று அமைப்புகளும் ஏற்கவில்லை.

அதைத் தொடர்ந்து டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக மேல் முறையீடு செய்யப்பட்டது. 14 அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அப்பீல் மனுக்கள் அனைத்தும் வொவ்ஒன்றாக விசாரிக்கப்பட்டது. இதற்கிடையே சமரச பேச்சு வார்த்தை நடத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஏற்பாடுகளும் நடந்து வந்தன. அதன்படி ஓய்வு பெற்ற சுப்ரீம்கோர்ட்டு மூத்த நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, வாழும் கலை அமைப்பாளர் ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம்பஞ்சு ஆகிய 3 பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டது. இடிக்கப்பட்ட பாபர் மசூதி குறித்து

இந்த குழு இந்துக்களையும், முஸ்லிம்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. 4 மாதங்களாக நடந்த சமரச பேச்சுவார்த்தை இறுதியில் வெற்றி பெறாமல் தோல்வியில் முடிந்தது… இதனையடுத்து அயோத்தி பிரச்சினை மேல்முறையீடு வழக்குகளை விரைந்து முடிக்க சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்தது. அதன்படி கடந்த ஆகஸ்டு 6-ம் தேதி முதல் தினசரி இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதைத்தொடர்ந்து,கடந்த 40 நாட்களாக நடைபெற்ற வாதப் பிரதிவாதங்கள் அக்டோபர் 16-ம் தேதியுடன் நிறைவடைந்திருந்த நிலையில், இன்று 5 நீதிபதிகள் தீர்ப்பு வாசித்தனர் அதில், ஷியா வாரியத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகளும் ஒரே மாதிரியான தீர்ப்பு எனவும் அறிவிக்கப்படும் என தெரிவித்தனர். ஒரு மதத்தினரின் மத நம்பிக்கை மற்ற மத நம்பிக்கையை தடுப்பதாக இருக்க கூடாது எனவும் தலைமை நீதிபதி தெரிவித்தார். இந்த நிலையில்.

நிலத்திற்கு உரிமை கோரிய நிர்மோகி அகாரா மனுவில் ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் பாபர் மசூதி கட்டப்பட்டதற்கு முன் இஸ்லாமிய கட்டிடங்கள் அங்கு எதுவும் இல்லை எனவும், மசூதிக்கு கீழ் உள்ள கட்டிடம் இஸ்லாமிய பாணியில் இல்லை என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் வாசித்தனர்.

பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை, வேறொரு கட்டிடத்தை இடித்துவிட்டுத்தான் மசூதி கட்டப் பட்டது என்றனர், அதே நேரத்தில் மசூதிக்கு கீழ் உள்ள கட்டிடம் இஸ்லாமியர் கட்டட பாணியிலும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல் அங்கு இந்து கோவில் கட்டடமும் இருந்ததற்கான சான்றுகள் இல்லை என்றும் தெரிவித்தனர்.

அங்கு ஆரம்ப காலத்தில் இந்து கோவிலோ அல்லது மசூதியோ இருந்ததற்கான ஆதாரங்கள் தொல்லியல் துறை ஆய்வில் தெரியவரவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று நிலத்தை வழங்க வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்று அனுமதித்து அதிரடியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.