அதிக சொத்து மதிப்பு | இந்தியாவில் 20% கோடீஸ்வரர்கள் 40 வயதுக்குட்பட்டவர்கள்!
நாட்டில் உள்ள அதிக சொத்து மதிப்புகொண்ட தனிநபர்களில் 20 சதவிகிதம் பேர் 40 வயதுக்குட்பட்டவர்கள் என ரியல் எஸ்டேட் ஆராய்ச்சி நிறுவனமான அனராக் தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள அதிக சொத்து மதிப்புகொண்ட தனிநபர்களில் 20 சதவிகிதம் பேர் 40 வயதுக்குட்பட்டவர்கள் என ரியல் எஸ்டேட் ஆராய்ச்சி நிறுவனமான அனராக் தெரிவித்துள்ளது.
8 லட்சத்து 50 ஆயிரம் பேர் 8 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கும் மேல் சொத்து மதிப்பு கொண்டவர்களாக இருப்பதாக அனராக் கூறியுள்ளது. அதேபோல, 16 லட்சத்து 50 ஆயிரம் பேர், 250 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து உள்ளவர்கள் எனவும் அனராக் தெரிவித்துள்ளது. கோடீஸ்வரர்களாக அடையாளம் காணப்படும் இவர்களில் 20 சதவிகிதம் பேர் 40 வயதுக்குள்ளானவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்துறை, நிதி தொழில்நுட்பத் துறை, ஸ்டார்ட் அப், தயாரிப்புத் துறை, ரியல் எஸ்டேட், பங்குச்சந்தை உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்திருக்கின்றனர்.
இந்த கோடீஸ்வரர்கள் தங்கள் சொத்தில் 32 சதவிகிதத்தை ரியல் எஸ்டேட் துறையிலும், 20 சதவிகிதத்தை பங்குச்சந்தையிலும், 8 சதவிகிதத்தை கிரிப்டோ கரன்சிகளிலும் முதலீடு செய்திருப்பதாக ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. மிக அதிக சொத்து மதிப்பு உள்ளவர்களில் 10 சதவிகிதம் பேர், போர்ச்சுகல், மால்டா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் மாற்று குடியுரிமை பெற்றுள்ளனர். 14 சதவிகிதம் பேர் துபாய், லண்டன், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சொத்துகளை வாங்கியுள்ளனர். அதிக சொத்து மதிப்புள்ளவர்களில் 37 சதவிகிதம் பேர் லாம்போகினி, போர்ஸ், ரோல்ஸ் ராய்ஸ் ஆகிய கார்களை வாங்கியுள்ளதாகவும் அனராக் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.