அதிகாரமிக்க 100 இந்தியர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி! மு.க.ஸ்டாலின்!! முதல் இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி!!!

0
154

அதிகாரமிக்க 100 இந்தியர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி! மு.க.ஸ்டாலின்!! முதல் இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி!!!

இந்தியன் எக்ஸ்பிரஸ் 2021ஆம் ஆண்டில் அதிகாரமிக்க 100 இந்தியர்களைப் பட்டியலிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், இரண்டாம் இடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இடம்பிடித்துள்ளனர். முதல் 10 பேர் அடங்கிய பட்டியலில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் தவிர்த்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

அதிகாரமிக்க 100 இந்தியர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்தவர்கள்:

1. பிரதமர் நரேந்திர மோடி
2. உள்துறை அமைச்சர் அமித்ஷா
3. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
4. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா
5. தொழிலதிபர் முகேஷ் அம்பானி
6. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
7. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
8. சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி
9. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
10. தொழிலதிபர் கவுதம் அதானி

அதிகாரமிக்க 100 இந்தியர்கள் பட்டியலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், நிர்மலா சீதாராமன், டிவி சோமநாதன், ரோஷினி நாடார் ஆகிய 5 தமிழர்கள் இடம்பிடித்துள்ளனர்.

அதிகாரமிக்க 100 இந்தியர்கள் பட்டியலில் இடம்பிடித்த தமிழர்கள்:

நிர்மலா சீதாராமன் முதல் பத்து இடங்களுக்குல் வந்திருக்கிறார். கடந்த முறை 8வது இடத்தில் இருந்த அவர் இந்த ஆண்டு 9வது இடம் பெற்றிருக்கிறார்.

இதே போல கடந்த ஆண்டு 30வது இடத்தில் இருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டு இடங்கள் முன்னேறி 28வது இடத்தை பிடித்திருக்கிறார். அதிகாரமிக்க இந்தியர்கள் பட்டியலில் ஸ்டாலின் சோனியா காந்தியை பின்னுக்குத்தள்ளியிருக்கிறர், சோனியா காந்தி இப்பட்டியலில் 34வது இடத்தையே பிடித்துள்ளார். அதே நேரத்தில் கடந்த ஆண்டு சோனியா 17வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த ஆண்டு 54வது இடத்தை பிடித்திருக்கிறார். கடந்த ஆண்டு 43வது இடத்தை பிடித்திருந்தார்.

நிதி அமைச்சகத்தின் செலவுச் செயலாளரான தமிழகத்தைச் சேர்ந்த டிவி சோமநாதன் 55வது இடத்தையும் ஹெச்சிஎல் நிறுவன தலைவர் ரோஷினி நாடார் 94வது இடத்தையும் பிடித்துள்ளனர்.