அஜித்தின் ‘விவேகம்’ தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் மீது மோசடி புகார்!

0

அஜித்தின் ‘விவேகம்’ தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் மீது மோசடி புகார்!

அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்சராஹாசன் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவான படம் ‘விவேகம்’.

இந்தப் படத்தின் வெளிநாட்டு உரிமை வழங்கியதில் மோசடி செய்ததாக சத்யஜோதி தியாகராஜன் மீது குற்றஞ்சாட்டப்பட்டு, மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் சத்யஜோதி தியாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.