அஜித்குமார் பெயரையோ, புகைப்படத்தையோ அவரது அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது வழக்கறிஞர் அறிவிப்பு

0

அஜித்குமார் பெயரையோ புகைப்படத்தையோ அவரது அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது வழக்கறிஞர் அறிவிப்பு

நடிகர் அஜித்குமார் பெயரையோ, புகைப்படத்தையோ அவரது அனுமதியின்றி எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது என அஜித்குமாரின் வழக்கறிஞர் ஆனந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஆனந்த் கூறியிருப்பதாவது:

நடிகர் அஜித்குமார் பெயரையோ, புகைப்படத்தையோ அவரது அனுமதியின்றி எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது. நடிகர் அஜித்குமார் எந்த வணிக சின்னத்திற்கும், பொருளுக்கும், நிறுவனத்திற்கும் விளம்பர தூதர் இல்லை. எந்த ஒரு தனி நபரையோ,குழுவையோ,அமைப்பையோ, சமூக வலைதளங்களையோ அஜித் அங்கீகரிக்கவில்லை.

தனக்கு அங்கீகரிக்கப்பட்ட ரசிகர் மன்றம் என்று ஒன்றும் இல்லை என அஜித் தெளிவுபடுத்தியுள்ளார்.சமூகவலைதளங்களில் அஜித்பெயரில் வரும் விமனர்சனங்கள் அவருக்கு மன உளைச்சலை அளிக்கிறது. அஜித்பெயரில் வந்த விமர்சனத்தால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன வருத்தம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.