‘அசுரன்” திரை விமர்சனம்

0

‘அசுரன்” திரை விமர்சனம்

ரேட்டிங்

141 நிமிடங்கள் கடந்து போவது தெரியாமல் ஏழை மக்கள் பார்த்த வலியை, ஹீரோயிசத்துடன் வெற்றிமாறன் பதிவிட்டு சிறப்பு அந்தஸ்தை பெறும் படம் தான் வி.கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணுவின் ‘அசுரன்”.

கதை : எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவல் மையக்கரு

இருள் சூழ்ந்த அடர்ந்த காட்டுக்குள் தனது மகன் சிதம்பரத்துடன் (கென் கருணாஸ்) சிவசாமி (தனுஷ்) ஒருபுறமும், பயந்த முகத்துடன் சிவசாமியின் மனைவி (மஞ்சு வாரியர்) அவரது அண்ணன் (பசுபதி) மற்றும் மகளுடன் மறுபுறமும் தப்பிச்செல்லும் காட்சியுடன் தொடங்குகிறது அசுரன்.

விவசாயியாக இருக்கும் சிவசாமி, தனது மனைவி பச்சயைம்மாள் (மஞ்சு வாரியர்), 2 ஆண் குழந்தை மற்றும் 1 பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இதே ஊரில் பெரும் பணக்காரரான வடக்கூரானும் (ஆடுகளம் நரேன்) அவரது தம்பிகளும் தொழிற்சாலை கட்ட சிவசாமியின் சொந்தமான நிலம் தேவைப்படுகிறது. அந்த நிலத்தை வாங்க முயற்சி செய்கிறார்கள். 3 ஏக்கர் நிலத்தை எழுதித்தராததால் பிரச்சனைகள் செய்து நிலத்தை அபகரிக்க நினைக்கிறார் வடக்கூரான்.இந்த பிரச்சனையில் சிவசாமியின் மூத்த மகன் கோபப்பட்டு, வடக்கூரானையும் அவரது தம்பியையும் அசிங்கப்படுத்தி விடுகிறான். இதனால், கோபமடைந்த நரேன் மூத்த மகனை கொன்று விடுகிறார். இதைக் கண்டு தனது தந்தை ஒன்றும் செய்யவில்லை என்று நினைக்கும் இளைய மகன் கென் கருணாஸ் அநியாயமாகக் கொல்லப்பட்ட அண்ணன் கொலைக்காக பண்ணையாரை கொலை செய்கிறான். பதிலுக்கு சிவசாமியின் குடும்பத்தையே கொலைவெறியோடு அழிக்க துடிக்கும் பண்ணையார் வகையாரிடமிருந்து மூத்த மகனை போல் இரண்டாவது மகனை பலி கொடுக்கக் கூடாது என்று நினைத்து, தனது குடும்பத்தைக் காப்பாற்றிக்கொள்ள காட்டுக்குள் சிவசாமி பதுங்குகிறார். அசுர ஆட்டத்தை ஆரம்பிக்கும் அவர் தன் நம்பிக்கைகுரிய வக்கீல் (பிரகாஷ்ராஜ்) உதவியுடன் நீதிமன்றத்தில் சரணடைய நினைக்கிறார். பண்ணையார் வகையாரிடமிருந்து தனது இளைய மகனை காப்பாற்றினாரா? நீதிமன்றத்தில் சரணடையும் அவர் என்ன ஆனார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிப்பு: சிவசாமி (தனுஷ்)
நடிகர் தனுஷ் தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். தனுஷின் நடிப்புப் பசிக்கும், சரியான தீனி அசுரன் திரைப்படம். ஒப்பனைகள் இன்றி, யதார்த்தமாக இயல்பாக வயதான தோற்றத்தில் சிவசாமியாகவே வாழ்ந்திருக்கிறார் தனுஷ். இது உன்மையாவே ஒரு நடிகனுக்கு கிடைத்த மிக பெரிய வெற்றி. தனது திரைத்துறை பயணத்தில் தனுஷ{க்கு மிகச் சிறந்த மாஸ்டர் பீஸ் அசுரன். சிறந்த நடிகருக்கான தேசிய விருது ரெடி.

பச்சயைம்மாள் (மஞ்சு வாரியர்)
சிவசாமியின் மனைவி பச்சயைம்மாள் ஒரு தாய்க்கே உரிய கோவத்தையும், பாசத்தையும் வெளிப்படுத்தி, வீரமிக்க கிராமத்து பெண்ணாக வாழ்ந்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் மஞ்சு வாரியர்.

மூத்தமகனாக வரும் டீ.ஜே சிறப்பான நடிப்பாற்றலால் அனைவருடைய பாராட்டையும் பெறுகிறார்.

தனுஷின் இளைய மகனாக, அண்ணனின் கொலைக்குப் பழிவாங்குகிற ஆக்ரோஷத் தம்பியாக வரும் கென் கருணாஸ் நடிப்பில் மிரள வைத்திருக்கிறார். தனுஷ{டன் போட்டி போட்டு தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய காட்சிகள் ரசிக்க வைக்கிறது. இது போல சிறந்த கதையம்சம் கொண்ட கதையை தேர்ந்தெடுத்து நடித்தால் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கலாம். ஹாட்ஸ் அப் கென்.

பசுபதி, நரேன், பிரகாஷ் ராஜ், அம்மு அபிராமி என அனைத்து கதாபாத்திரத்திரமும் மிகச்சிறப்பான தேர்வு. அனைவரும் மனதில் நிற்கிறார்கள்.

இசை: நீண்ட நாட்களுக்குப் பிறகு தனுஷ{ம், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ{ம் அசுரன் படத்தில் இணைந்த இந்தக் கூட்டணியின் கம்பேக் பெரிதும் கொண்டாடப்படும். ஜிவி.பிரகாஷின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. திரைக்கதை ஓட்டத்திற்கும், தனுஷின் மிரட்டலான நடிப்பிற்கு அதிர்வை ஏற்படுத்துவது ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை தான்.

ஒளிப்பதிவு: வேல்ராஜின் ஒளிப்பதிவும் அபாரம். 1960-ல் நடைபெறும் கதைகளத்தில் நம்மை அப்படியே ஐக்கியமாக்கிறது அவரது ஒளிப்பதிவு.

சண்டைக் காட்சி : இடைவேளை சண்டைக் காட்சி அதகளத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின்.

கலை இயக்குனர் : ஜாக்கியின் கலையும் கதை சொல்கிறது.

படத்தொகுப்பு: ஆர். ராமர்; பங்களிப்பு படத்தின் வெற்றிக்கு கைகொடுத்திருக்கிறது.

இயக்கம்: வெற்றிமாறன்
எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலை மையமாக வைத்து அசுரன் படத்தை இயக்கி இருக்கிறார் வெற்றிமாறன்.சின்ன சின்ன கதாபாத்திரங்களை கூட பேச வைத்திருக்கிறார் வெற்றிமாறன். ஆனால் யதார்த்தமாக நகரும் கதையில் க்ளைமேக்ஸ{க்கு முந்தைய காட்சிய கொஞ்சம் ஓவர் தான்.இயல்பான சண்டைகாட்சியாக காட்சிபடுத்தியிருக்கலாம். எனிவே வெல்டன் வெற்றிமாறன்.

தயாரிப்பாளர் : கலைப்புலி எஸ்.தாணு

பாரதிராஜா இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த கிராமத்து கதைகளம் கொண்ட படம் கிழக்குச்சீமையிலே. இத்திரைப்படத்தில் நடித்த நெப்போலியன், விஜயகுமார், ராதிகா, விக்னேஷ் பாண்டியன் மற்றும் இசையமைத்த ஏ.ஆh.ரஹமான் உள்ளிட்ட அனைவருக்கும் பெருமை சேர்த்தது. அன்று அனைவருக்கும் அந்த பெருமை கிடைக்க அதிக பெருட்செலவில் மிகமிரம்மாண்ட படமாக தயரித்தவர் கலைப்புலி எஸ்.தாணு. அதே போல் இன்று அசுரன் மூலம் அனைத்து கலைஞர்களுக்கு மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கே பெருமை சேர்த்துள்ளார் வெள்ளை நிறத்துக்கும் புன்சிரிப்புக்கும் சொந்தக்காரர் கலைப்புலி எஸ்.தாணு.

மொத்தத்த்pல் ‘அசுரன்” வந்தான், நின்றான், தமிழ் சினிமாவை வென்றான். நிச்சயம் விருதுகள் பல பெற்று வசூல் சாதனை புரிவான்.

நம்ம பார்வையில் வி.கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கும் ‘அசுரன்” படத்துக்கு 4.5 ஸ்டார் தரலாம்.