முதல் படம் 25வது ஆண்டு! முதல் தாயாரிப்பாளரிடம் ஆசி பெற்ற டைரக்டர் எஸ்.எழில்!

0
171

முதல் படம் 25வது ஆண்டு! முதல் தாயாரிப்பாளரிடம் ஆசி பெற்ற டைரக்டர் எஸ்.எழில்!

சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி தயாரித்த “துள்ளாத மனமும் துள்ளும்” இன்றோடு 25வது ஆண்டு நிறைவடைகிறது. தனக்கு முதல் படம் வாய்ப்பளித்த தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்திரி அவர்களை நேரில் சந்தித்து இனிப்பு மற்றும் பூச்செண்டு கொடுத்து ஆசி பெற்றார்.

“இது தொடர்பாக விஜய் சாரை சந்திக்க நேரம் கேட்ட போது உடனடியாக என்னை வரச் சொன்னார். வாழ்த்து சொன்னதோடு, அவரது பழைய படங்கள், இப்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் படம் உள்ளிட்ட பல விஷயங்களை விரிவாக என்னிடம் பகிர்ந்து கொண்டார். ரொம்ப நாட்களுக்கு பிறகு மனம் விட்டு பேசிக் கொண்டிருந்தார். மற்றும் சிம்ரன் போனில் வாழ்த்தினார் என்ற தகவலையும் டைரக்டர் எழில் சொன்னார்.

எழில் அடுத்து இயக்கி வரும் படம், இன்ஃபினிட்டி கிரியேஷ்ன்ஸ் பி.ரவிசந்திரன் தயாரிக்கும் விமல் நடிக்க #தேசிங்குராஜ2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி டிரண்ட் ஆனது.