வாத்தி சினிமா விமர்சனம்: வாத்தி கல்விக்காக ஏங்கும் மாணவ-மாணவிகளுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் | ரேட்டிங்: 3.5/5

0
1745

வாத்தி சினிமா விமர்சனம்: வாத்தி கல்விக்காக ஏங்கும் மாணவ-மாணவிகளுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் | ரேட்டிங்: 3.5/5

நடிகர்கள் : தனுஷ், பாரதிராஜா, சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய்குமார், தனி கேளு பரணி, தோட்டப்பள்ளி மது, நாரா ஸ்ரீநிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஆடுகளம் நரேன், ஹரீஷ் பேரடி, கென் கருணாஸ், பிரவீணா லலிதாபாய், இளவரசு, மொட்டை ராஜேந்திரன், சுமந்த், சாரா, பவிஷ்.
எழுதி இயக்கியவர்: வெங்கி அட்லூரி
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: ஜே யுவராஜ்
கதை: நவின் நூலி
தயாரிப்பு வடிவமைப்பாளர்: அவினாஷ் கொல்லா
சண்டைக்காட்சிகள் – வெங்கட்
தயாரிப்பு: நாக வம்சி எஸ் – சாய் சௌஜன்யா
பேனர்: சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் – பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்
தமிழகத்தில் இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது.
மக்கள் தொடர்பு: ரியாஸ் கே அகமது (V4U மீடியா)3 மாணவர்கள் ஒரு பழைய விசிடி மூலம் ஒரு வித்தியாசமான நபரை காட்டுவதுடன் படம் துவங்குகிறது. அந்த நபர் கணக்கு வாத்தியார் பாலா (தனுஷ்) என்பதும், 90களில் நடந்த கல்வியை தனியார் மயக்குமாக்குதல் பிரச்சனையில் சிக்கியவர் என்பதும் தெரிய வருகிறது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் பல மாணவர்களின் வாழ்க்கையை மாற்றிய ஒரு ஆர்வமுள்ள ஆசிரியரின் விவரங்களைக் கண்டறிய தமிழ்நாட்டின் வேலூரைச் சேர்ந்த இந்த மூன்று மாணவர்கள் புறப்படுகின்றனர். ஒரு கிராமத்தில் வசதி குறைந்த இளைஞர்களுக்கு இலவச மற்றும் தரமான கல்வியை வழங்குவதற்காக ஆசிரியர் நடத்திய போராட்டங்களை விவரிக்கும் ஒரு மாவட்ட ஆட்சியரை அவர்கள் ஆந்திர பிரதேசத்தில் பார்க்கிறார்கள். மூன்று மாணவர்களுக்கு பாலமுருகனின் கதையை அந்த மாவட்ட ஆட்சியரை  சொல்கிறார். இது ஆர்வமுள்ள மாணவர்களின் ஆர்வத்தை மேலும் உயர்த்துகிறது.

பாலமுருகன் (தனுஷ்) திருப்பதி எஜுகேஷனல் இன்ஸ்டியூட்டில் இளநிலை விரிவுரையாளர் ஆவார். 90களின் இறுதியில் ஆசிரியர்கள் இல்லாததால் அரசு பள்ளிகள் மூடப்படுகின்றன. இந்த அவல நிலையை மாற்றியமைக்க பள்ளி நிர்வாகம் தமிழக – ஆந்திர எல்லையில் உள்ள கிராமப்புறங்களில் உள்ள பல அரசு பள்ளிகளை தத்தெடுத்து தனியார் பள்ளிகள் சார்பில் ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதன்படி திருப்பதி எஜுகேஷனல் இன்ஸ்டியூட்டில் இருந்து பாலமுருகன் (தனுஷ்) என்ற ஆசிரியர் தமிழக – ஆந்திர எல்லையில் உள்ள சோழபுரம் என்ற கிராமத்தில் இயங்கும் அரசுப் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார். மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செல்லும் பாலமுருகனுக்கு பல்வேறு அதிர்ச்சிகளும், சவால்களும் அங்கே காத்திருக்கின்றன. அதையெல்லாம் கடந்து பாலமுருகன், விரிவுரையாளர் மீனாட்சியின் (சம்யுக்தா) உதவியுடன், உள்ளூர் மாணவர்கள் பள்ளிக்கு வந்து தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவது உறுதி செய்கிறார். பாலா தனது சிறந்த தரமான கற்பித்தல் மூலம் இந்த அரசு பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவதை நினைத்துக் கூட பார்க்க முடியாததை செய்கிறார். இது திருப்பதி எஜுகேஷனல் இன்ஸ்டியூட் தலைவர் திருப்பதியை (சமுத்திரக்கனி) ஆத்திரமடையச் செய்து, பாலாவின் எதிர்காலத் திட்டங்களை பாழாக்குகிறார். பெற்றோர் மற்றும் நிர்வாகத்தின் ஆதரவு இல்லாத அரசு பள்ளியில் தன் திறமையை காட்ட வேண்டிய நிலையில் இருக்கிறார் பாலா.பாலமுருகன் அடுத்து என்ன செய்தார்? அங்கிருக்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை எப்படி மேம்படுத்துகிறார். அந்த தன்னலமற்ற ஆசிரியர் இப்போது எங்கே? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

நேர்மையான உணர்ச்சிகளால்  பொருத்தமான சிக்கலைக் கையாண்டு மாணவர்களுக்கு இலவசமாக கற்பிக்க வேண்டும் என்று நினைக்கும் ஜூனியர் லெக்சரர் பாலா கதாபாத்திரத்தில் தனுஷ் நன்றாக பொருந்துகிறார். அவர் கதாபாத்திரத்தை மிக எளிமையாகவும்  மற்றும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளில் அவரது எதார்த்தமான நடிப்பு அபாரம். படம் முழுவதையும் அவர் மட்டுமே சுமந்துள்ளார். அவருக்கும் மாணவர்களுக்கும் இடையிலான பாச போராட்ட காட்சிகள் பெரிய அளவில் வேலை செய்கிறது.

மீனாட்சியாக பயாலஜி ஆசிரியராக சம்யுக்தா அழகாக இருக்கிறார். காதல், ரொமான்ஸ் டச் கொடுக்க திரைக்கதையில் இடம்பெற்றாலும் அவரது திரை நேரம் குறைவாக இருந்தாலும், அவர் தனது கண்ணியமான நடிப்பால் முத்திரை பதிக்கிறார்.சமுத்திரக்கனி சக்தி வாய்ந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது கேக்வாக். அவர் தனது மோசமான தன்மையை வெளிப்படுத்த சரியான காட்சிகள் இல்லாவிட்டாலும் அவரது தாக்கத்தை உணர வைக்கிறார். கிராமத் தலைவராக சாய் குமார் கண்ணியமான கதாபாத்திரத்தைப் பெற்று அதன் தேவையை பூர்த்தி செய்கிறார். சமுத்திரக்கனியும் சாய்குமாரும் தங்கள் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

கென் கருணாஸ் ஒவ்வொரு காட்சியுடன் உணர்ச்சிப்பூர்வமாக இணைத்து சிறப்பாக நடித்துள்ளார்.

ஆடுகளம் நரேன் தனுஷின் அப்பாவாகவும், கார் டிரைவராகவும், கதைக்கு தேவையான போது உணர்வுப்பூர்வமான டச் கொடுக்கிறார். படத்தில் விசிடி ஒளிப்பதிவாளராக ராஜேந்திரன் சில முக்கியப் பகுதிகளில் சிறப்பாக செய்துள்ளார்.

30 செகண்ட் வந்து போகும் பாரதிராஜா, தனிகல பரணி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீநிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஹரீஷ் பேரடி, கென் கருணாஸ், பிரவீணா லலிதாபாய், இளவரசு, சாரா, பவிஷ்  ஆகிய துணை கதாபாத்திரங்கள் தங்களுக்குரிய கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர்.

யுவராஜின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. அவரின் காட்சியமைப்புகள் தமிழ் மற்றும் தெலுங்கு நேட்டிவிட்டிக்கு இடையில் சம நிலையை ஏற்படுத்துகிறது. நவீனின் எடிட்டிங் இன்னும் கூர்மையாக இருந்திருக்கலாம். ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை, மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் சம்பந்தப்பட்ட சில உணர்ச்சிகரமான காட்சிகளை உயர்த்தி நிறுத்துகிறது. பாடல்கள் கடந்து செல்லக் கூடியதாகவும் உள்ளது. வெங்கட்டின் ஸ்டண்ட் காட்சிகள் நேர்த்தியாக உள்ளன.

தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு இடையேயான வணிகத்தில் கல்வி எப்படி கையாளப்படுகிறது என்கிற வழக்கமான தான் கதையில் பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதன் முக்கியத்துவத்தையும் சாதி அமைப்புடன் தொடர்புடைய தீமைகளை ஒழிப்பதன் முக்கியத்துவத்தையும் படம் தொடுகிறது. கட்டணம் மற்றும் கல்வியில் தனியார் கல்லூரிகள் எப்படி பணத்தை கொள்ளை அடிக்கின்றன என்பதையும், மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் உள்ள தொடர்பு பற்றி திரைக்கதை அமைத்து ஆர்பாட்டமில்லாத எளிய முறையில் இயக்கியுள்ளார் வெங்கி அட்லூரி. ஆசிரியர் எப்படி வேண்டுமானாலும் ஒரு மாணவனுக்கு எப்படி கல்வி புகட்டலாம், அதன் மூலம் அரசுப் பள்ளிக் கல்வியில் படிக்கும் மாணவனை எப்படி உயர்த்த முடியும் என்பதை நன்றாக காட்டியதுடன், கூடத்தில் ஜாதி, மத பேதமின்றி எப்படி படிப்பது என்பதை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர். வாத்தி திரைப்படம் ஆசிரியர் சமுதாயத்தை கடவுளாக காட்டுகிறது. குழந்தைகளின் கல்வியின் மதிப்பை புரிந்துகொள்ள பெற்றோர்களுக்கு இந்த படம் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும். குறிப்பாக பெண் கல்வி மிகவும் போற்றப்படுகிறது.

மொத்தத்தில் சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரித்துள்ள வாத்தி கல்விக்காக ஏங்கும் மாணவ-மாணவிகளுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.