V3  விமர்சனம் : V3 பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் படம்  | ரேட்டிங்: 3/5

0
387

V3  விமர்சனம் : V3 பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் படம்  | ரேட்டிங்: 3/5

நடிகர்கள் :
வரலட்சுமி சரத்குமார் (சிவகாமி)
பாவனா (விந்தியா)
எஸ்தர் அனில் (விஜி)
ஆடுகளம்  நரேன் (வேலாயுதம்)
விசாரணை கதை ஆசிரியர் சந்திர குமார் (லோகோ)
பொன்முடி (விஸ்வநாதன்)
ஜெய் குமார்
ஷீபா
தொழில்நுட்பக் கலைஞர்கள் :
இயக்கம் – அமுதவாணன்
இசை – ஆலன் செபாஸ்டியன்
ஓளிப்பதிவு – சிவா பிரபு
எடிட்டர் – நாகூரன்
ஒலி வடிவமைப்பு – உதய குமார்
கலரிஸ்ட் – ஸ்ரீராம் பாலகிருஷ்ணன்
ஸ்டண்ட் – மிரட்டல் செல்வா
காஸ்ட்டியூம் – தமிழ்ச் செல்வன்
ஒப்பனை – ஹேமா – மீரா
VFX – கியூபெக் fx – மோசஸ்
SFX – சதீஷ் குமார்
தயாரிப்பு மேலாளர் – சந்தோஷ் குமார் | முத்துராமன்
பிஆர்ஓ – சதீஷ்குமார், சிவா – Team AIM
நிர்வாக தயாரிப்பாளர் – புகழேந்தி.
தயாரிப்பு இல்லம்: டீம் A வென்ச்சர்ஸ்
கதை:
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த வேலாயுதத்திற்கு (ஆடுகளம் நரேன்) இரண்டு மகள்கள் விந்தியா (பாவனா) மற்றும் விஜி (எஸ்தர் அனில்). ஒரு நாள் வேலை  விஷயமாக வெளியூர் சென்று நேர்முக தேர்வை முடித்து கோயமுத்தூர் வந்து இரு சக்கர வாகனத்தில் இரவில் வீடு திரும்பும் விந்தியாவை ஐந்து பேர் சேர்ந்த ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். இந்த செய்தி காட்டு தீ போல் பரவுகிறது. இந்த ஐந்து பேர் சேர்ந்த கும்பலுக்கு அரசியல் பின்புலம் இருப்பதால், அவர்களின் அதிகார உத்தரவின் பேரில் காவல்துறை தனிக்கவனம் செலுத்தி இந்த வழக்கை முடிக்க வேறு ஐந்து நபர்களை என்கவுண்டர் செய்து விடுகிறார்கள். என்கவுண்டர் செய்யப்பட்ட நபர்களின் பெற்றோர்கள் தங்கள் மகன்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்று காவல் நிலையத்தில் கதறி போராடுகிறார்கள். இதனால், நெருக்கடிக்கு உள்ளாகும் ஆளும் அரசாங்கம் முதலமைச்சர் உத்தரவின் பேரில் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி தலைமையில் (வரலட்சுமி சரத்குமார்) இந்த வழக்கை விசாரித்து வழக்கின் உண்மை நிலவரத்தை கண்டறிய நியமிக்கப்படுகிறார். பாலியல் பலாத்காரம் மற்றும் என்கவுண்டர் ஆகிய இந்த இரண்டு வழக்கின் விசாரணை நடக்கிறது, ஜனநாயகம் குறித்த சில இருண்ட உண்மைகள் வெளிச்சத்துக்கு வருகிறது. அந்த திடுக்கிடும் சம்பவங்கள் என்ன? விந்தியாவுக்கு நீதி கிடைத்ததா? உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்களா?  என்பதை அறிய டீம் A வென்ச்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ள  V3  படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
வரலக்ஷ்மியின் திரை இடம் மிக முக்கியமானது, தேசிய மனித உரிமைகள் ஆணையம்  மூலம் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமியாக வரலக்ஷ்மி விசாரணை அதிகாரியாக தனக்கு வழங்கப்பட்ட பாத்திரத்திற்கு நியாயம் செய்து சிறப்பித்துள்ளார்.
வேலாயுதம் கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன் நடுத்தர வர்க்க தந்தையின் மனக்குமுறலை மகளின் நிலையை கண்டு கலங்கும் உணர்ச்சி ததும்பிய நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பாவனா (விந்தியாவாக) கதறலும் இறுதியில் பேசும் அழுத்தமான வசனம் சிந்திக்க வைக்கின்றன. எஸ்தர் அனில் (விஜியாக), பொன்முடி (விஸ்வநாதனாக) மற்றும் மற்ற நடிகர்கள் தங்கள் கதாபாத்திரங்களாக கச்சிதமாக பொருந்தி கவனத்தை ஈர்க்கிறார்கள்.
சிவபிரபு ஒளிப்பதிவு மற்றும் ஆலன் செபாஸ்டியன் இசை, பின்னணி இசையை சிறப்பாக செய்துள்ளார்கள். இது பல காட்சிகளை சிறப்பாக அமைக்க உதவியுள்ளது.
எடிட்டர் நாகூரன், மிரட்டல் செல்வா சண்டை காட்சி உட்பட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்களிப்பு திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்க்க நன்றாக உழைத்துள்ளார்கள்.
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட வலுவான கதையை கையில் எடுத்து உணர்வுபூர்வமான காட்சிகளை திரைக்கதையில் புகுத்தி விபச்சார தடையை நீக்கவும், 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு பாலியல் கல்வி  வலியுறுத்தி பதிவுசெய்துள்ளார் இயக்குனர் அமுதவாணன்.
மொத்தத்தில், டீம் A வென்ச்சர்ஸ் தயாரித்துள்ள  V3  பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் படம்.