தி கிரேட் இந்தியன் கிச்சன் விமர்சனம்: தி கிரேட் இந்தியன் கிச்சன், இது இன்றைய பெண் சமுதாயம் தடங்கல்களை கடந்து  வந்த பாதையை சொல்கிறது | ரேட்டிங்: 2.5/5

0
300

தி கிரேட் இந்தியன் கிச்சன் விமர்சனம்: தி கிரேட் இந்தியன் கிச்சன், இது இன்றைய பெண் சமுதாயம் தடங்கல்களை கடந்து  வந்த பாதையை சொல்கிறது | ரேட்டிங்: 2.5/5

மலையாளத்தில் கடந்த 2021-ல் வெளியாகிய ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் பேசு பொருளானது. அதை தற்போது தமிழில் ரீமேக் செய்திருக்கிறார்கள். தமிழில் இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை துர்காராம் சௌத்ரி மற்றும் நீல் சௌத்ரி தயாரித்துள்ளார்கள். போஸ்டர் நந்தகுமார், ராகுல் ரவீந்திரன், கலைராணி, யோகி பாபு.
தொழில்நுட்ப வல்லுநர்கள் பட்டியல்:
இசை மற்றும் பிஜிஎம் : ஜெர்ரி சில்வர்ஸ்டர் வின்சென்ட்
ஓளிப்பதிவு : பாலசுப்ரமணியம்
பாடல்கள் : கபிலன் வைரமுத்து, டாக்டர். கிருத்தியா
எடிட்டிங் : லியோ ஜான் பால்
மக்கள் தொடர்பு : ஜான்சன்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடன வகுப்பில் எடுக்கப்பட்ட காட்சியுடன் படம் துவங்குகிறது. அவள் மகிழ்ச்சியாக இருப்பதை  முகத்தில் புன்னகையில் இருந்து தெளிவாகிறது. ஒரு சமூகவியல் ஆசிரியரை அவர் மணக்க பிறகு அவளுடைய கணவனின் வீட்டில் குடும்பத்தின் மரபுகளுடன் பழகும் போது, அவளுடைய வாழ்க்கை சமையலறையில் விரிவடைகிறது. அங்கு அவள் தன் மாமியாருடன் சேர்ந்து காய்கறிகளை வெட்டுகிறாள், அரைக்கிறாள்,சமைக்கிறாள், கழுவுகிறாள், வீட்டை  துடைத்து  சுத்தம் செய்கிறாள். முதலில் விழிப்பதும், கடைசியாக படுக்கைக்கு வருவதும் அவள்தான், அங்கே கணவனின் ஆசையை பூர்த்தி செய்கிறாள். இதற்கிடையில், கணவர் காலை உணவு மற்றும் அலுவலகத்திற்கு செல்லும் முன் யோகா செய்கிறார். வீட்டின் மற்றொரு பகுதியில், அவரது மாமனார் தனது டூத் பிரஷ்ஷில் பற்பசையைப் போட்டுக் கொண்டு வருவதற்காக அவருடைய மனைவிக்காக காத்திருப்பார் வீட்டில் ஆண்கள் இருவரும் இஷ்டப்படி இருக்கின்றனர். இப்படியே தினந்தோறும் இச்சம்பவம் தொடர்கிறது. இந்நிலையில், மாமியார் தன் இளைய மகளின் பிரசவத்திற்காக செல்கிறார். அன்றிலிருந்து குடும்ப பொறுப்பு முழுவதையும் ஐஸ்வர்யா ராஜேஷ் கவனித்து கொள்கிறார். தன் மாமியார் செய்த வேலையையும் சேர்த்து அவள் கவனிக்க வேண்டியியதாகி விடுகிறது. சில மாதங்களாக மாமியார் இல்லாதது அவளது வாழ்க்கையை மேலும் கடினமாக்குகிறது. அவர்களது குடும்பத்தின் மரபுகள் மற்றும் வழக்கமான வீட்டு வேலைகளைத் தொடர அவள் போராடுகிறாள். மனஉளைச்சலில் சிக்கி தவிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஒரு கட்டத்தில் இந்த வாழ்க்கையின் மீது சலிப்பை ஏற்படுத்துகிறது. இதனால், நடன ஆசிரியர் பணிக்கு செல்ல விருப்பப்படுகிறார். இதற்கு கணவர் மற்றும் மாமனார் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். எதிர்ப்பை மீறி வேலைக்கு செல்ல முயற்சி செய்கிறார். புகுந்த வீட்டில் அவளுடைய வாழ்க்கை ஒரு பொருட்டாகவே கருதப்படவில்லை. அவள் திருமணம் செய்து கொண்ட வீட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வளர்ப்பு கொண்டவர், மாதவிடாய் தொடர்பான பழமையான பழக்கவழக்கங்களை இன்னும் நம்பும் குடும்பத்தில் வாழ்வது கடினம் என்பதை உணர்கிறாள். சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட அமைப்பை அவள் எப்படி சமாளிக்கிறாள் அல்லது வேறு ஏதேனும் முடிவை எடுக்கிறாளா? என்பதே மீதிக்கதை.

படம் ஆணாதிக்கத்தைப் பற்றி பேசுவது போல், இந்த ஆண்கள் ஆளும் மரபுகளை ஒருபோதும் கேள்வி கேட்காத ஒடுக்கப்பட்ட பெண்களைப் பற்றியது.ஐஸ்வர்யா ராஜேஷ் தன் குடும்பத்தில் உள்ள ஆண்களால் கட்டளையிடப்பட்ட வாழ்க்கையை சரிசெய்ய போராடும் மனைவியாக பாத்திரம் கழுவுவது, வீட்டு வேலை செய்வது என நம்பமுடியாத அளவிற்கு கவனிக்க வைத்து நம்மை கதாபாத்திiமாகவே மாறி நம்ப வைக்கிறார். வேறு யாராவது அவரது பங்கை இன்னும் பொருத்தமாக நடித்திருக்க முடியுமா என்று சிந்திக்க சிறிதளவும் இடம் தராமல் ரசிகர்களின் பாராட்டை பெறுகிறார்.

கணவனாக வரும் ராகுல் ரவீந்திரன் சுயநல மனிதராக நடித்துள்ளார். மாமனாராக போஸ்டர் நந்த்தகுமார், கலைராணி, திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார்கள்.

யோகிபாபுவின் கேமியோ தோற்றம் எடுபட வில்லை.

ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமண்யம், எடிட்டர் லியோ ஜான் பால், பின்னணி இசையில் ஜெர்ரி சில்வஸ்டர் வின்சன்ட் ஆகியோர் கதைக்குத் தேவையான அளவு கோளை கையாண்டு, படத்தை மற்றொரு நிலைக்கு உயர்த்த உதவியது அவர்களது பங்களிப்பு.

கதைக்களம் எளிமையானதாகத் தோன்றினாலும், திரைப்படம் அமைதியாக, மிகவும் வேதனையான பாணியில், இந்தியாவில் திருமணமான ஒரு பெண்ணின் வாழ்க்கை மற்றும் சமையலறையில் அவள் பங்கு பற்றிய ஒரு பார்வையை நமக்கு வழங்குகிறது. பெண்ணை அதன் முதுகெலும்பாகப் போற்றும் குடும்பத்தின் பல்வேறு அம்சங்களைப் படம் பிடித்துக் காட்டுகிறது. ஒவ்வொரு ஷாட்டின் போதும், நம் வீட்டில் பெண்களை எப்படி நடத்துகிறோம் போன்ற கேள்விகளைக் கேட்கும் போது படம் ஒருவரை அவரது இருக்கையில் நெகிழ வைக்கிறது. வீட்டை ஒழுங்காகவும், ஆண்களுக்கு வசதியாகவும் இருக்க பெண்கள் பல விஷயங்களுக்கு இடையே சூழ்ச்சி செய்யும் திரைப்படத்தில் சமையலறை ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது. ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டாலும், காரணம் எதுவாக இருந்தாலும், பெண்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். படத்தில் பெரும்பாலான காட்சிகள் மீண்டும் மீண்டும் வரும் அழுத்தமில்லாத காட்சிகள்  நமக்கு சலிப்புத் தட்டுகிறது. மலையாளத்தில் எப்படி இருந்ததோ அதே போல் அப்படியே தமிழில் படைத்திருக்கிறார் இயக்குனர் ஆர். கண்ணன். ஆனால் 80 அல்லது 90 கால கட்டம் இல்லை என்பதை இயக்குனர் ஆர். கண்ணன் மறந்திருப்பார். போல் தெரிகிறது. 2000-த்திற்கு பிறகு பெண்களிடம் நிறைய மாற்றங்கள் இருக்கிறது. குறிப்பாக 2020-க்கு பிறகு பெண்கள் சுதந்திரமாக முடிவெடுக்கும் தைரியம் அதிகரித்துள்ளது என்பதை இயக்குனர் ஆர். கண்ணன் அறிந்திருப்பார். அதனால்  இன்றைய காலத்திற்கும், தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு ஏற்றது போல் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில், ஆணாதிக்கத்தை பற்றி பேசும் தி கிரேட் இந்தியன் கிச்சன், இது இன்றைய பெண் சமுதாயம் தடங்கல்களை கடந்து  வந்த பாதையை சொல்கிறது.