ரன் பேபி ரன் திரை விமர்சனம்: ரன் பேபி ரன் வேகம் குறைவு | ரேட்டிங்: 2.5/5

0
441

ரன் பேபி ரன் திரை விமர்சனம்: ரன் பேபி ரன் வேகம் குறைவு | ரேட்டிங்: 2.5/5

ரன் பேபி ரன்  ஆர்.ஜே.பாலாஜியின் த்ரில்லர் வகையில் முதல் முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது . இப்படத்தை எஸ்.லக்ஷ்மண்குமார் தனது பிரின்ஸ் பிக்சர்ஸ் பேனரில் தயாரித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ், இஷா தல்வார், ராதிகா ஆர்.சரத்குமார், ஸ்ம்ருதி வெங்கட், ஜார்ஜ் மரியான், ஜோ மல்லூரி, ஹரிஷ் பேரடி, நாகிநீடு, விவேக் பிரசன்னா, தமிழரசன், கேபி பாலா, கபாலி விஷ்வந்த், ராஜ் அய்யப்பா, பகவதி பெருமாள், பிரியதர்ஷினி, ரெத்திகா ஸ்ரீனிவாஸ்.
இசை – சாம். சி.எஸ்., ஒளிப்பதிவு – எஸ். யுவா, எடிட்டர் – ஜி. மதன், கலை இயக்குனர் – வீரமணி கணேசன், ஸ்டண்ட் – ஆர். சக்தி சரவணன், பாடல்கள் – விவேகா, ஆடை வடிவமைப்பாளர்கள் – திவ்யா நாகராஜன், நிஜம் கண்மணி , தயாரிப்பு – பிரின்ஸ் பிக்சர்ஸ், தயாரிப்பாளர் – எஸ். லக்ஷ்மன் குமார், எழுத்து மற்றும் இயக்கம் – ஜியென் கிருஷ்ணகுமார்.
மக்கள் தொடர்பு – ஜான்சன்

ரன் பேபி ரன், உயரமான அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடத்தில் இருந்து விழுந்து இறக்கும் அந்த கல்லூரி மாணவி சோஃபி (ஸ்ம்ருதி வெங்கட்) தற்கொலையின் ஆரம்பம் ஆகிறது.  என்ன நடக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்வதற்கு முன்பே, மறுபுறம் ரன் பேபி ரன் நாயகன் சத்யா (ஆர்.ஜே. பாலாஜி) தனது வாழ்க்கையை முடிக்க திட்டமிடுகிறார். இரண்டு கதாபாத்திரங்களும் எப்படி ஒன்றோடு ஒன்று சம்மந்தம் பட்டுள்ளது என்பதை பார்ப்போம். ரன் பேபி ரன் நாயகன் சத்யா, வங்கியில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு இஷா தல்வாருடனான திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. இந்நிலையில், தாராவை (ஐஸ்வர்யா ராஜேஷ்) மர்ம நபர்கள் துரத்துவதால், ஆர்.ஜே.பாலாஜியின் காரில் அவருக்கு தெரியாமல் பின்புறம் ஏறிச் செல்கிறார். சத்யா தனது வருங்கால மனைவியுடன் வாகனம் ஓட்டிச் செல்லும் போது, தாரா (ஐஸ்வர்யா ராஜேஷ்) தனது காருக்குள் மறைந்திருப்பதை கண்டுபிடிக்கிறார். ஆர்.ஜே.பாலாஜியின் வீடு வரை செல்லும் தாரா, அவரிடம் தான் ஆபத்தில் இருப்பதாக கூறி அவளை உள்ளே அனுமதிக்கும்படி கட்டாயப்படுத்துகிறாள். முதலில் மறுக்கும் சத்யா, தாராவை உள்ளே அனுமதித்து தன் வீட்டில் இருக்கும் ஒரு அறையில் இடம் கொடுக்கிறார். மறுநாள் எழுந்து பார்க்கும் பொழுது, தாரா இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். ஒரு போலீஸ் நண்பன் விவேக் பிரசன்னா ஆலோசனையை பின்பற்றி, உடலை தனது சொந்த ஊரான செஞ்சிக்கு கொண்டு சென்று அப்புறப்படுத்த முடிவு செய்கிறார். தாராவின் சடலத்தை வீட்டில் இருந்து எப்படி அப்புறபடுத்தினார்? அப்போது வழியில் என்ன நடந்தது? இந்த விஷயம் போலீசாருக்கு எப்படி தெரியவந்தது? இந்நிலையில், சத்யாவுக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து மிரட்டுகிறார். யார் அந்த மர்ம நபர்? தாரா, சத்யா மற்றும் சோஃபி இவர்களுக்குள் என்ன தொடர்பு? இறுதியில் தாராவை கொலை செய்தது யார்? சத்யா இந்த பிரச்சனையில் இருந்து விடுபட்டாரா? இந்த பல கேள்விகளுக்கு ரன் பேபி ரன் பதிலளிக்கிறது.

ஆர்.ஜே.பாலாஜி முழுக்க முழுக்க ஒரு சீரியஸ் ரோலில் நடிப்பது அவருக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் தந்திருக்கும். வழக்கமாக நக்கல் மற்றும் நய்யாண்டி இவை மட்டுமே முந்தைய படங்களில் வழங்கி வந்தாலும், இந்த படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை அப்பாவி சத்யாவாக அமைதி மற்றும் பதட்டம் கலந்த ஒரு கண்ணியமான நடிப்பை வெளிப்படுத்தி அவர் இன்னும் ஒரு மேம்படுத்தப்பட்ட நடிகராக மாறியுள்ளார்.

தாராவாக ஐஸ்வர்யா ராஜேஷின் திரைப் பிரவேசம் குறைவு என்றாலும் பார்வையாளர்களை கதாபாத்திரத்தின் அவல நிலையை சிறப்பான நடிப்பு மூலம் உணர வைக்கிறார்.

ராதிகா ஆர்.சரத்குமார், ஜார்ஜ் மரியான், ஜோ மல்லூரி, போலீஸ் நண்பன் விவேக் பிரசன்னா, சோஃபியாக ஸ்ம்ருதி வெங்கட், வேன் டிரைவராக கபாலி விஷ்வந்த், ராஜ் அய்யப்பா, ஹரீஷ் பேரடி, பகவதி பெருமாள், இஷா தல்வார், நாகிநீடு, தமிழரசன், கேபி பாலா, பிரியதர்ஷினி, ரெத்திகா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பல அற்புத கலைஞர்கள் இருந்தாலும், திரைக்கதையில் அவர்களுக்கு உண்டான காட்சிகள் மிக குறைவு என்றாலும், அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இசை – சாம். சி.எஸ்., ஒளிப்பதிவு – எஸ். யுவா, எடிட்டர் – ஜி. மதன், கலை இயக்குனர் – வீரமணி கணேசன், ஸ்டண்ட் – ஆர். சக்தி சரவணன், பாடல்கள் – விவேகா, ஆடை வடிவமைப்பாளர்கள் – திவ்யா நாகராஜன், நிஜம் கண்மணி  ஆகியோரின் தொழில்நுட்ப அம்சங்கள் க்ரைம் த்ரில்லருக்குத் தேவையான விறுவிறுப்பையும், சஸ்பென்ஸ் த்ரில்லர் களில் உள்ள உணர்ச்சிகளை கதையோடு முன்னோக்கி கொண்டு செல்ல உதவியுள்ளது.

ரன் பேபி ரன் முழுவதும் இணைக்கப்பட்ட புதிரான த்ரில்லர் கதை. முதல் பாதியில் த்ரில்லராக தொடங்கி இரண்டாவது பாதி ஒரு சில திருப்பங்களுடன் புலனாய்வு திரில்லராக போதுமான தாக்கத்தை ஏற்படுத்தாத வேகம் குறைந்து காணப்படுகிறது. நாம் நாள் தோறும் கடந்து வரும் செய்தியை கையாளும் போது திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதை இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் கடைபிடிக்க தவறிவிட்டார் மற்றும் மனதில் நிலைத்து நிற்கும் அளவுக்கு காட்சிகள் அமைய வில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மொத்தத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் தயாரித்திருக்கும் ரன் பேபி ரன் வேகம் குறைவு.