O2 விமர்சனம்: O2 இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உயர் வாழ போராடும் த்ரில்லிங் அனுபவத்தை கொடுக்கும் படம் | ரேட்டிங் – 3/5

0
86

O2 விமர்சனம்: O2 இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உயர் வாழ போராடும் த்ரில்லிங் அனுபவத்தை கொடுக்கும் படம் | ரேட்டிங் – 3/5

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு இணைந்து தயாரித்து டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் நடிகை நயன்தாரா, சிறுவன் ரித்விக், பரத் நீலகண்டன், ஆர்.என்.ஆர்.மனோகர், ஜாபர் இடுக்கி, ஆடுகளம் முருகதாஸ், சிவா சாரா, அர்ஜுனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இயக்குநர் ஜி.எஸ்.விக்னேஷ்; எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தமிழ் ;ஏஅழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். செல்வா ஆர்.கே படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். கலை-என்.சதீஷ்குமார், வசனம்-விக்னேஷ், புதியபார்தி, சந்திரகாந்த், சண்டை-ஏ.எஸ்.சுதீஷ்குமார், பாடல்கள்-ராகேஷ் கிரிபிரசாத், மோகன்ராஜ், கே.ஆர்.தரன்,மக்கள் தொடர்பு-AIM சதீஷ்.

கோவையிலிருந்து கொச்சிக்கு தன் மகன் ரித்விக்கின் சுவாச சிகிச்சைக்காக நயன்தாரா ஆம்னி பஸ்ஸில் ;அழைத்துச் செல்கிறார். செல்லும் வழியில் எட்டு பேருடன் ஆம்னி பஸ் மண் சரிவு விபத்தில் சிக்கி புதைந்து விடுகிறது. பணத்தாசை பிடித்த இன்ஸ்பெக்டர், ஒடிப்போக நினைக்கும் காதலர்கள், காதலியின் தந்தை, விடுதலையான கைதி, அரசியல்வாதி மற்றும் ஆம்னி பஸ் டிரைவர் ஆகியோர் பரிதவிக்கின்றனர்.பேரிடர் மீட்பு குழுவினர் மீட்க முடியாத நிலையில் இருக்கும் இடத்தில் புதைந்து இருக்கும் ஆம்னி பஸ்ஸில் இருக்கும் குறைந்த நேரத்தில் உயிர் வாழ போராடும் எட்டு பேர் எப்படி தங்கள் உயிரை மட்டும் காப்பாற்ற முயற்சி செய்கின்றனர்? என்பதே கதைக்களம்.

இப்படத்தில் தாய் பார்வதியாக நடிகை நயன்தாரா, மகனாக ரித்விக், லீணா, ஆர்.என்.ஆர். மனோகர், ஆடுகளம் முருகதாஸ், ஜாஃபர் இடுக்கி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளது சிறப்பு.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் பேருந்துக்கு உள்ளேயே  நடப்பதாக இருப்பதை தத்ரூபமாக தனது கலை வடிவமைப்பின் மூலம் வலுச் சேர்த்துள்ளார் கலை இயக்குநர் சதீஷ் குமார்.

ஒளிப்பதிவு தமிழ் ஏ அழகன் மற்றும் எடிட்டிங் செல்வா ஆர்.கே ஆகியோர் சவாலான பணியை திறம்பட செய்துள்ளனர்.

விஷால்சந்திரசேகரின் இசை படத்திற்கு பலம்.

தன் 8 வயது மகனுடன் விபத்தில் சிக்கும் பேருந்தில் மாட்டிக் கொள்ளும் தாய், நுரையீரல் பிரச்சனைக்காக மாற்று ஆக்ஸிஜன் சிலிண்டரை, பஸ்ஸில் மாட்டிக்கொண்ட மற்றொரு பயணியான காவல் அதிகாரி குறி வைக்க, தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதை பரபரப்பாக சொல்லும் படத்தை ஸ்குவிட் கேம் போல் இயக்கி படத்தை விறுவிறுப்புடன் கொடுத்துள்ளார் இயக்குனர் ஜி.எஸ்.விக்னேஷ். ஆக்சிஜன் முக்கியத்துவத்தை உணர்த்த இந்த படத்தை எடுத்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில்  ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு இணைந்து தயாரித்திருக்கும் O2 இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உயர் வாழ போராடும் த்ரில்லிங் அனுபவத்தை கொடுக்கும் படம்.