நான் கடவுள் இல்லை திரைவிமர்சனம்: நான் கடவுள் இல்லை – கமர்சியல் கலந்த ஆக்ஷன் பேக் எண்டர்டெய்னர் | ரேட்டிங்: 2.5/5

0
302

நான் கடவுள் இல்லை திரைவிமர்சனம்: நான் கடவுள் இல்லை – கமர்சியல் கலந்த ஆக்ஷன் பேக் எண்டர்டெய்னர் | ரேட்டிங்: 2.5/5

ஒரு காலத்தில் சட்டத்தின் நுணுக்கங்களை  கையில் எடுத்துக்கொண்டு பரபரப்பான படங்களை இயக்கியவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து அவர் இயக்கியிருக்கும் 71-வது  படமாகும்.

இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, ‘பருத்தி வீரன்’ சரவணன், எஸ்.ஏ.சந்திரசேகர், இனியா, சாக்ஷி அகர்வால், அபி சரவணன், யுவன் மயில்சாமி, ரோகிணி, இமான் அண்ணாச்சி, மதுரை மாயக்கா, தியான ஸ்ரீ ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – மகேஷ் கே தேவ், இசை – சித்தார்த் விபின், படத் தொகுப்பு – பிரபாகர் மற்றும் பிஜு டான் போஸ்கோ, கலை இயக்கம் – வனராஜ்.
மக்கள் தொடர்பு – சக்திசரவணன்.

ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி செந்தூர பாண்டி (சமுத்திரக்கனி) மனைவி மகேஸ்வரி (இனியா), மகள் உமா (தியான ஸ்ரீ) மற்றும் தாயுடன் (மதுரை மாயக்கா) வாழ்ந்து வருகிறார். ஈவு இறக்கமற்ற கொடூரமான பல கொலை செய்துவந்த கொலைக்காரன் வீரப்பனை (சரவணன்)  பிடித்து  சிறையில் அடைக்கிறார் செந்தூர பாண்டி. சில ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயிலில் இருந்து தப்பிக்கும் வீரப்பன், தன்னை கைது செய்த செந்தூர பாண்டியையும் அவரது குடும்பத்தையும் கொலை செய்ய முயற்சிக்கிறார்.  இந்நிலையில் அவரது மனைவி மகேஸ்வரிக்கு (இனியா) தன்னையும் தன் மகளையும் வீரப்பன் சுட்டுக் கொல்வது போல கனவு வருகிறது. சிறையில் இருந்து தப்பித்து வந்த வீரப்பன் தனக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதி குடும்பத்தில் அனைவரையும் கொடூரமாகக் கொலை செய்கிறான். போலீஸ் அதிகாரி செந்தூர பாண்டியின் குடும்பத்தைக் கொல்ல ஆள் அனுப்புகிறான் . இந்த முயற்சி தோல்வியடைவதால் செந்தூர பாண்டியின் மகளை கடத்துகிறான். மறுபுறம் ஒரு சிறிய அனாதை பெண் கடவுளுக்கு புதிய ஆடைகள் கேட்டு கடிதம் எழுதுகிறாள். ஜோதிலிங்கம் (எஸ்.ஏ.சந்திரசேகர்) என்ற தொழிலதிபர் எதேச்சையாக அந்தக் கடிதத்தைப் பெற்று அந்த சிறுமியின் ஆசையை பூர்த்தி செய்கிறார். கடவுள் தன் ஆசையை நிறைவேற்றினார் என்று அந்த சிறுமி நம்புகிறாள். இது விரைவில் வைரலாகி, மக்கள் கடவுளுக்கு கடிதங்களை அனுப்பத் தொடங்குகின்றனர். செந்தூரனின் மகள் உமா, தன் குடும்பத்தை கொலைகாரனிடமிருந்து காப்பாற்ற கடவுளுக்கு கடிதம் எழுதுகிறாள். அதன் பின் என்ன நடந்தது? அவளுடைய கோரிக்கையை கடவுள் நிறைவேற்றினாரா? அல்லது செந்தூர பாண்டி நிறைவேற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திற்கு கம்பீரமாக பொருந்தி இருக்கிறார் சமுத்திரகனி. மனைவி, மகள், தாய் மீது பாசம் காட்டி காக்கி சட்டை மீது உள்ள மதிப்பை உயர்த்தி குற்றவாளிகளை பிடிக்க ஆர்வம் காட்டுவது என்று நடிப்பில் ஸ்கோர் செய்து மனதில் நிற்கிறார்.

பாசமிகு குடும்ப தலைவியாக இனியா, மகள் உமாவாக தியான ஸ்ரீ, அம்மாவாக மதுரை மாயக்கா ஆகியோரின் நடிப்பின் மூலம் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

போலீஸ் அதிகாரி செந்தூர பாண்டி உதவியாளராக வரும் சாக்ஷி அகர்வால் கவர்ச்சிக்காக பயன்படுத்தியுள்ளனர். டூ பீஸில் கவர்ச்சி காட்சியளித்தும், போலீஸ் வேலையையும் சிறப்பாகப் செய்து அதிரடியாக டூப் இல்லாமல் சண்டை போட்டு இளவட்டங்களின் கவர்ச்சி கன்னியாக ஆக்ஷன் குயினாக வலம் வருகிறார்.

எஸ்.ஏ.சந்திரசேகர், அபி சரவணன், யுவன் மயில்சாமி, ரோகிணி, இமான் அண்ணாச்சி, ஆகியோர் திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளனர்.

ஒளிப்பதிவு – மகேஷ் கே தேவ், இசை மற்றும் பின்னணி இசை – சித்தார்த் விபின், படத் தொகுப்பு – பிரபாகர் மற்றும் பிஜு டான் போஸ்கோ, கலை இயக்கம் – வனராஜ் ஆகிய தொழில் நுட்ப குழுவினர் அனைவரும் நன்றாக வேலை செய்துள்ளனர்.

இன்று விஞ்ஞான வளர்ச்சியில் தமிழ் சினிமா வேறு லெவலுக்கு சென்றுள்ளது என்பதை அன்று பல பெரிய ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் எஸ்.ஏ.சி. யும் அறிவார். இன்றையை இளம் இயக்குனர்களின் அபார சிந்தனைக்கும் ஈடுகொடுக்க ஒரு போலீஸ் அதிகாரியை சுற்றி வரும் கதையை தேர்ந்தெடுத்து அன்று இருந்த அதே எனர்ஜியில் மீண்டும் ஒரு திரில்லர் திரைப்படத்தை இன்றைய இளவட்டங்களுக்கு தேவையான அம்சங்களை கமர்சியல் கலந்து, சமுதாயத்திற்கு ஒரு நல்ல செய்தியையும் திரைக்கதையில் சொல்லி அவர் ஸ்டைலில் படைத்துள்ளார் இயக்குனர் எஸ்.ஏ.சி.
மொத்தத்தில் ஸ்டார் மேக்கர்ஸ் நான் கடவுள் இல்லை – கமர்சியல் கலந்த ஆக்ஷன் பேக் எண்டர்டெய்னர்.