மெய்ப்பட செய் விமர்சனம் : மெய்ப்பட செய் குற்றங்கள் நிகழாமல் தடுக்க  கொடுக்கும் பாடம் | ரேட்டிங்: 2.5/5

0
398

மெய்ப்பட செய் விமர்சனம் :

மெய்ப்பட செய் குற்றங்கள் நிகழாமல் தடுக்க  கொடுக்கும் பாடம் | ரேட்டிங்: 2.5/5

ஹர்ஷித் பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.தமிழ்செல்வம் தயாரிப்பில், மெய்ப்பட செய் படத்தில் அறிமுக நடிகர் ஆதவ் பாலாஜி, மதுனிகா, தயாரிப்பாளர் தமிழ்செல்வம், ஆடுகளம் ஜெயபாலன், ஓ.ஏ.கே.சுந்தர், இயக்குநர் ராஜ்கபூர், ராகுல் தாத்தா, சூப்பர் குட் சுப்பிரமணி, பயில்வான் ரங்கநாதன், விஜய கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
வேலன் கதை, வசனம், திரைக்கதை இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மெய்ப்பட செய். இசை-பரணி, ஒளிப்பதிவு-ஆர்.வேல், பாடல்கள்-பரணி, உமாதேவி, வேலன், எடிட்டர்-கேஜே.வெங்கட்ரமணன், கலை-கிருஷ்ணமூர்த்தி, சண்டை-மிரட்டல் சிவா, நடனம்-தீனா, உடை-தனபால், பிஆர்ஒ – சுரேஷ் சுகு, தர்மதுரை.

கிராமத்தில் மூன்று நண்பர்களுடன் ஆதவ் பாலாஜி. வேலையில்லாமல் ஊர் சுற்றிக் கொண்டு, அதே கிராமத்தில் வசிக்கும் மதுனிகாவை காதலிக்கிறார்.இவர்கள் காதலை மதுனிகாவின் தாய்மாமன் பி.ஆர்.தமிழ் செல்வம் அறிந்து  இவர்களின் காதலுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் இவர்களுக்கும் ஊருக்கும் தெரியாமல் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு நண்பர்கள் மூன்று பேருடன் ஊரை விட்டு வெளியேறி பிழைப்பு தேடி சென்னை வருகிறார்கள். சென்னையில் வீட தேட பிரபல ரவுடியின் வீடு என்று தெரியாமல் வாடகைக்கு எடுத்து தங்குகிறார்கள். பின்னர் அது ரவுடியின் வீடு என்று தெரிந்து கொள்கின்றனர்.அந்த வீட்டில் பின்பகுதியில் பிணம் புதைத்து இருப்பதைப் பார்த்து போலீசிற்கு தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால் போலீஸ் இதனை கண்டு கொள்ளாமல் எச்சரித்து அனுப்பி விடுகின்றனர்.இந்த தகவல் ரவுடியின் மகனுக்கு தெரிந்து இவர்களை அடித்து உதைத்து விட்டு எச்சரிக்கிறார்.இதனால் மீண்டும் அவர்கள் ஊருக்கே சென்று விட தீர்மானித்து செல்கிறார்கள். ஆனாலும் பாலியல் கொடுமைகள் செய்யும் ரவுடியின் மகனுக்கு பாடம் புகட்ட நினைக்கின்றனர். அதன் பின் ஆதவ் பாலாஜி தன் நண்பர்களுடன் சேர்ந்து என்ன திட்டம் தீட்டுகிறார். ரவுடியின் மகனை என்ன செய்தனர்? போலீசிற்கு தெரியாமல் எப்படி பார்த்துக் கொண்டனர் என்பதே க்ளைமேக்ஸ்.

அறிமுக நடிகர் ஆதவ் பாலாஜி  அனைத்து காட்சிகளிலும் முழு பங்களிப்பை கொடுத்து தேர்ந்த நடிகர் போல் நடித்துள்ளார். வசீகர நாயகியாக காதல் மனைவியாக மதுனிகா, வில்லனாக முறைப்பும், விரைப்பும் நிறைந்த தயாரிப்பாளர் தமிழ்செல்வம், கட்ட கஜாவாக தாதாவாக ஆடுகளம் ஜெயபாலன், நல்ல போலீஸ் அதிகாரியாக ஓ.ஏ.கே.சுந்தர், நாயகியின் அப்பாவாக இயக்குநர் ராஜ்கபூர், ராகுல் தாத்தா, சூப்பர் குட் சுப்பிரமணி, பயில்வான் ரங்கநாதன், விஜய கணேஷ் ஆகியோர் படத்தில் வலம் வந்துள்ளனர்.

இசை-பரணி, ஒளிப்பதிவு-ஆர்.வேல், ஆகியோர் பட்ஜெட்டிற்குகேற்ற ரம்யமான காட்சிகளையும், பாடல்களையும் கொடுத்து நியாயம் செய்துள்ளனர்.

எடிட்டர்-கேஜே.வெங்கட்ரமணன், கலை-கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் படத்திற்கு உறுதுணையாக இருந்து கச்சிதமான கொடுத்துள்ளனர்.

பாலியல் குற்றங்கள் பற்றிய திரைக்கதையில் கொஞ்சம் குடும்ப சென்டிமெண்ட், கமர்ஷியல், காதல், நட்பு, பழி வாங்குதல் கலந்து சமூக அக்கறையோடு திறம்பட கையாண்டு அதற்கான தண்டனை எப்படி இருக்க வேண்டும் என்பதை நெத்தியடியாக கொடுத்து இயக்கியிருக்கிறார் வேலன்.

மொத்தத்தில் ஹர்ஷித் பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.தமிழ்செல்வம் தயாரிப்பில் மெய்ப்பட செய் குற்றங்கள் நிகழாமல் தடுக்க  கொடுக்கும் பாடம்.