லவ்வர் சினிமா விமர்சனம் : லவ்வர் இளவட்டங்களை கவர்ந்து இழுக்கும் | ரேட்டிங்: 3.5/5

0
334

லவ்வர் சினிமா விமர்சனம் : லவ்வர் இளவட்டங்களை கவர்ந்து இழுக்கும் | ரேட்டிங்: 3.5/5

நடிகர்கள்
மணிகண்டன் – அருண்
ஸ்ரீ கௌரி ப்ரியா -திவ்யா
கண்ணா ரவி – மதன்
‘கலைமாமணி’ சரவணன் ராஜா
கீதா கைலாசம் கலா
ஹரிஷ் குமார் சுகைல்
நிகிலா சங்கர் ரம்யா
ரிணி ஐஸ்
அருணாச்சலேஸ்வரன்.பா
விஸ்வா
தொழில்நுட்ப கலைஞர்கள்:
இயக்குனர் – பிரபு ராம் வியாஸ்
எழுத்தாளர் – பிரபு ராம் வியாஸ்
ஒளிப்பதிவு – ஷ்ரேயஸ் கிருஷ்ணா
இசை – ஷான் ரோல்டன்
படத்தொகுப்பு – பரத் விக்ரமன்
தயாரிப்பு – MILLION DOLLAR STUDIOS & MRP ENTERTAINMENT
தயாரிப்பாளர்கள் – நஸிரத் பசிலியன், மகேஷ் ராஜ் பசிலியன், யுவராஜ்
கணேசன்
மக்கள் தொடர்பு யுவராஜ்

ஐடி ஊழியர் திவ்யா (ஸ்ரீ கௌரி ப்ரியா), பொசஸிவ்னெஸ், தாழ்வு மனப்பான்மை இரண்டும் கலந்த அருண் (மணிகண்டன்) உடன் எப்படி காதலில் விழுந்தாள் என்பதை தனது அலுவலக நண்பர்களிடம் சொல்லும் கதையுடன் தொடங்குகிறது. அவள் அவனை முதன் முதலில் சந்தித்த போது புன்னகையில் ஏற்பட்ட காதலை விவரிக்கும் போது அருண் இடம் இருந்து வரும் ஒரு தொலைபேசி அழைப்பு திவ்யாவின் கதையை உடைக்கிறது, அடுத்த நொடி அவள் முகத்தில் புன்னகை மறைகிறது. அவள் தயக்கத்துடன் அழைப்பை எடுக்கிறாள், மறுமுனையில் அருண் நீ எங்கே இருக்கிறாய் என்று கேட்க, அவள் ஒரு விழாவில் இருப்பதாக பொய் சொல்கிறாள். அருண் அதை நம்பாமல் கேள்வி மேல் கேட்க, அவன் தான் கூறிய பொய்யை கண்டு பிடித்து விட்டான் என்பதை அவள் உணர்கிறாள். அவளது தோழி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள ஒரு படத்திலிருந்து, அவள் எங்கே இருக்கிறாள் என்பதை அறிந்து தான் திவ்யாவுக்கு போன் செய்கிறான். ஒரு கட்டத்தில் திவ்யா போன் அழைப்பை துண்டித்து விடுகிறாள். பின்னர் கோபமடைந்த அருண் குடித்து விட்டு அவளது வீட்டிற்கு சென்று சண்டை போடுகிறான். அவள் அவனிடம் கெஞ்சுகிறாள், அப்போது திவ்யா தங்களது காதலை இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்று கூறுகிறாள். உடனே அருண் தன்னை மன்னித்து விடும்படி கேட்கிறான். இப்படியாக ஒவ்வொரு முறையும் சம்பவங்கள் நடை பெறுகிறது. அருண் மற்றும் திவ்யா இருவரும் 6 வருடங்களாக ஒருவரையொருவர் காதலித்து சண்டையிட்டு  பின் பிரிந்து செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள், ஒரு கட்டத்தில் திவ்யா தீர்க்கமாக தன் காதலை முறித்துக் கொள்ள தீர்மதானிக்கிறாள். அதன் பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல், சுய நம்பிக்கை இழந்து ‘பொசசிவ்னஸ்’ என்ற பெயரில் தன்னுடைய கட்டுப்பாட்டில் காதலி இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்து காதல், சண்டை, எச்சரிக்கை, அழுகை, பிரிவு, ஏமாற்றம், அவ்வப்போது வெடிக்கும் கோபம் என அனைத்தும் உடல் மொழி, டயலாக் டெலிவரி மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் மணிகண்டன். என்ன ஒரு குறை என்றால் அவருடைய நடிப்பு அப்படியோ விஜய்சேதுபதியை பிரதிபலிக்கிறது. மேலும் படம் முழுக்க குடி மற்றும் புகை பிடிக்கும் காட்சிகள் 95 சதவீதம் உள்ளது. அதை மணிகண்டன் கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.

‘பொசசிவ்னஸ்’ என்ற பெயரில் தன்னை தன் கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கும் காதலன் அருணை அவ்வப்போது மன்னித்து அவன் மீது அன்பு வைத்தால், தனக்கு விருப்பமானதை செய்ய ‘சுதந்திர’மான உலகைத் தேடும் திவ்யா கதாபாத்திரத்தில் ஸ்ரீ கௌரி பிரியா அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி கண்களால் பேசி அனைவரையும் கவர்ந்துள்ளார்.

மதன் அடக்கமான கதாபாத்திரத்தில் கண்ணா ரவி நேர்த்தியான நடிப்பு வெளிப்படுத்தியுள்ளார்.

அழுத்தம் இல்லாத கதாபாத்திரத்தில் சரவணனின் பங்களிப்பு வீணடிக்கப்பட்ட உள்ளது.

கீதா கைலாசம், ஹரிஷ் குமார், நிகிலா சங்கர், ரிணி ஐஸ், அருணாச் சலேஸ்வரன்.பா ஆகியோரின் கதாபாத்திரங்கள் கதையோடு ‘எங்கேஜிங்’ ஆகி திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஸ்ரேயாஸ் கிருஷ்ணா – அழகிய காட்சி கோணங்கள்.

ஷான் ரோல்டன் பின்னணி இசை -ஈர்ப்பு மற்றும் இசையில் பாடல்கள் – ஓகே.

படத்தொகுப்பு – பரத் விக்ரமன் – முதல் பாதியில் கொஞ்சம் கத்திரித்திருக்கலாம். இரண்டாம் பாதி விறுவிறுப்பு.

இன்றைய காலகட்டத்தின் காதல், குறிப்பாக ஐடி உலகத்தில் குடி மற்றும் புகை பழக்கத்தின் கும்மாளம் போடும் கூட்டம், அதில் ஒரு சிலருக்கு ஏற்படும் காதல், அதன் பின் காதலி அவர்கள் ஆண் நண்பர்களுடன் சகஜமாக பழகும் போது காதலனுக்கு ‘பொசசிவ்னஸ்’ வினால் காதலி மீது ஏற்படும் சந்தேகத்தால் ஏற்படும் மன உளைச்சல் விளைவு என்ன என்பதை திரைக்கதை அமைத்து படைத்துள்ளார். இயக்குனர் பிரபு ராம் வியாஸ். அதே நேரத்தில் திரைக்கதையில் க்ளைமாக்ஸில் நாயகன் நாயகி மீண்டும் சந்தித்து செல்லும் காட்சியை இன்னும் தெளிவாக விளக்கியிருக்கலாம்.

மொத்தத்தில் நஸிரத் பசிலியன், மகேஷ் ராஜ் பசிலியன், யுவராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்ள லவ்வர் இளவட்டங்களை கவர்ந்து இழுக்கும்.