லால் சலாம் சினிமா விமர்சனம் : லால் சலாமுக்கு ஒரு ராயல் சலாம் | ரேட்டிங்: 3.5/5

0
318

லால் சலாம் சினிமா விமர்சனம் : லால் சலாமுக்கு ஒரு ராயல் சலாம் | ரேட்டிங்: 3.5/5

நடிகர்கள்:-

ரஜினிகாந்த்
விஷ்ணு விஷால்
விக்ராந்த்
கபில்தேவ்(சிறப்புத் தோற்றம்)
ஜீவிதா
அனந்திகா சனில்குமார்
செந்தில்
கே.எஸ்.ரவிக்குமார்
லிவிங்ஸ்டன்
நிரோஷா
தம்பி ராமையா
ஆதித்ய மேனன்
விவேக் பிரசன்னா
நந்தகுமார்
தன்யா பாலகிருஷ்ணா
தங்கதுரை

படக்குழு :
தயாரிப்பு : லைகா புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர் : சுபாஸ்கரன்
திரைக்கதை மற்றும் இயக்குனர் : ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
இசையமைப்பாளர் : ஏ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவாளர் : விஷ்ணு ரங்கசாமி
படத்தொகுப்பாளர் : பி.பிரவின் பாஸ்கர்
கலை இயக்குனர் : ராமு தங்கராஜ்
நடன இயக்குனர் : தினேஷ்
சண்டைப் பயிற்சி இயக்குனர்கள் : ‘அனல்’ அரசு, ‘கிக்காஸ்’ காளி, ‘ஸ்டண்ட்’விக்கி
பாடலாசிரியர்கள் : யுகபாரதி, சினேகன், கபிலன், விவேக், ஏ.ஆர்.ரஹ்மான், மஷ_க் ரஹ்மான்
கதை மற்றும் வசனகர்த்தா : விஷ்ணு ரங்கசாமி
ஆடை வடிவமைப்பாளர் : சத்யா என்.ஜே
ஒலி வடிவமைப்பாளர் : பிரதாப்
ஒலிக்கலவை: எஸ்.சிவகுமார் (ஏ.எம் ஸ்டுடியோஸ்)
படங்கள் : ஆர்.எஸ். ராஜா
விளம்பர வடிவமைப்பாளர்: கபிலன் செல்லையா
நிர்வாகத் தலைமை(லைகா புரொடக்ஷன்ஸ்) : ஜி.கே.எம். தமிழ் குமரன்
நிர்வாகத் தயாரிப்பாளர் : சுப்ரமணியன் நாராயணன்
மக்கள் தொடர்பு: ரியாஸ்.மு.அஹ்மத்

1990 களில் கள்ளக்குறிச்சிக்கு அருகே உள்ள மூரார்பாத் என்ற ஊரில் திருநாவுக்கரசு என்கிற திரு (விஷ்ணு விஷால்) மற்றும் சம்சுதீன் என்கிற ஷம்சு (விக்ராந்த்) இருவரும் பகையால் பிரிந்த பால்ய நண்பர்கள். திருவின் தந்தை (லிவிங்ஸ்டன்), ஷம்சுவின் தந்தை மொய்தீன் பாய் என்ற பாய் (ரஜினிகாந்த்) நல்ல நண்பர்கள். பாய் மும்பையில் ஜவுளி வியாபாரம் செய்து மிகப் பெரிய தொழிலதிபராக விளங்குகிறார். அவருக்கு மும்பையில் பல எதிரிகள் உள்ளனர். திருவின் தந்தை இறந்தபோது, பாய் அவருடைய குடும்பத்தை கவனித்துக்கொள்கிறார். திருவின் தாய் (ஜீவிதா) பாய்யை அண்ணாவாக கருதுகிறார். கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட திரு, ஷம்சு இருவரும் எப்போதும் மோதிக்கொள்கிறார்கள். இருவருக்குள்ளும் ஆப்பு வைத்து, தேவைப்பட்டால் இரு மதத்தினரிடையே வாக்குகளைப் பெறவும் அரசியல் எதிரிகள் விவேக் பிரசன்னா மற்றும் அவரது தந்தை நந்தகுமார் திட்டம் தீட்டுகின்றனர். திரு கிராமத்தில் கிரிக்கெட் அணியை நடத்தி வெற்றியை குவிக்கிறார். கிரிக்கெட் போட்டியில் திருவையும் அவரது அணியையும் வீழ்த்த மும்பையிலிருந்து சம்சு வருகிறார். போட்டி நடக்கும் போது இறுதியில் இரு அணிகளுக்கும் சண்டை ஏற்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விவேக் பிரசன்னாவின் சதியால், கிரிக்கெட் தொடரில் மதக்கலவரம் மூள்கிறது. கலவரத்தில் திரு, சம்சு கையை வெட்டி சிறைக்குச் செல்கிறார்.ஒரு கையை இழந்த சம்சு திருவை பழிவாங்க காத்திருக்கும் வேளையில் ஊர் மக்கள் திருவால் ஏற்பட்ட கலவரத்தால் கோபத்தில் இருக்கும் போது ஜாமீனில் திரு வெளியே வருகிறார். ஊர் திருவிழாவில் தேர் ஊர்வலத்தின் போது, விவேக் பிரசன்னாவின் சதிச் செயலால் கோயில் தேர்த் திருவிழாவும் தடைபடுகிறது. திருவின் மீதுள்ள கோபத்தில் இப்படிச் செய்ததாகக் கூறி திருவை ஊரை விட்டே துரத்துகிறார்கள். ஊரில் மக்களிடம் நல்ல பெயர் எடுக்க விஷ்ணு விஷால் முயற்சிக்கிறார். அதற்க்காக திரு புதிய தேருடன் திரும்ப முடிவு செய்கிறார். ஏற்கனவே திரு மீது கோபத்தில் இருக்கும் ஊர் மக்கள் திருவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்களா? கையை இழந்த சம்சு பழி தீர்த்தாரா? பாய் இப்போது என்ன செய்தார்? மதக்கலவரம் அதிகரித்ததா? திருவிழாவில் தேர் பிரச்சனை என்ன ஆனது? கிரிக்கெட்டுக்கும் மதத்துக்கும் என்ன சம்பந்தம்? திருவை பழிவாங்க பாய்க்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்தும் பாய் ஏன் திருவை பழி வாங்க வில்லை? இதையெல்லாம் தீர்த்து பாய் என்ன செய்தார்? இதை தெரிந்து கொள்ள படத்தை முழுமையாக பார்க்க வேண்டும்.

ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தாலும் படம் முழுவதும் வருகிறார். அவர் தோன்றும் காட்சிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தனது மேனரிஸங்களாலும், மொய்தீன் பாய் கதாபாத்திரத்துடன் மதம் மற்றும் நல்லிணக்கம் பற்றிய உரையாடல்கள் அருமையாக உள்ளன.

விஷ்ணு விஷாலின் கதாபாத்திரம் பிரமிக்க வைக்கிறது. நல்ல நடிப்பை வெளிப்படுத்தினர். கிராமத்துச் சூழல் வேறு சில காட்சிகள் அருமையாக வழங்கப்பட்டுள்ளன.

விக்ராந்தின் நடிப்பு நன்றாக உள்ளது. விக்ராந்த் ஒரு நல்ல கிரிக்கெட் வீரர் என்பதால் சம்சுவின் பாத்திரத்தில் பொருத்தமாக இருக்கிறார்.

அனந்திகா மற்றும் தன்யா பாலகிருஷ்ணா சிறிய வேடங்களில் தோன்றுகிறார்கள். கபில்தேவ் சம்சுவுக்கு கிரிக்கெட் கற்றுக் கொடுக்கும் கேரக்டரில் தோன்றி சிறிது நேரம் மகிழ்விக்கிறார்.

திருவின் அம்மாவாக எமோஷனல் கேரக்டரில் ஜீவிதா ராஜசேகர் தனது நடிப்பால் கவர்ந்துள்ளார்.

ரஜினியின் மனைவியாக நிரோஷா, செந்தில், கே.எஸ்.ரவிக்குமார், லிவிங்ஸ்டன், தம்பி ராமையா, ஆதித்ய மேனன், தங்கதுரை மற்றும் வில்லன்களாக விவேக் பிரசன்னா, நந்தகுமார் ஆகியோர் தங்கள் பாத்திரங்களின் தன்மைக்கேற்ப நடிப்பை வழங்கியுள்ளனர்.

பிரவீன் பாஸ்கரின் படத்தொகுப்பும், விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

கிரிக்கெட்டை வைத்து மதக் கதையைக் தெளிவாகவும் வலுவாகவும் சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

மொத்தத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள லால் சலாமுக்கு ஒரு ராயல் சலாம்.