(KOZHIPANNAI CHELLADURAI) கோழிப்பண்ணை செல்லதுரை சினிமா விமர்சனம் : கோழிப்பண்ணை செல்லதுரையில் சீனு இராமசாமி அவர்களின் அக்மார்க் முத்திரை காண முடியாதது பார்வையாளர்களுக்கு பெரும் ஏமாற்றம் | ரேட்டிங்: 2.5/5
விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் சார்பில் டி. அருளானந்து தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் யோகி பாபு, புதுமுகங்கள் ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா, லியோ சிவகுமார், பவா செல்லதுரை, மானஸி கொட்டாச்சி உள உட்பட பலர் நடித்திருக்கும் படம் கோழிப்பண்ணை செல்லதுரை.
தொழில்நுட்ப கலைஞர்கள்:
இசை: என்.ஆர். ரகுநந்தன்
ஒளிப்பதிவு: அசோக்ராஜ்
வசனங்கள்: பிரபாகர், சீனு ராமசாமி
எடிட்டர்: ஸ்ரீகர் பிரசாத்
கலை இயக்குனர்: ஆர்.சரவணா அபிராமன்
தயாரிப்பு மேற்பார்வையாளர்: செல்வ சண்முகம்
நடன இயக்குனர்: நோபல்
சண்டைக்காட்சிகள்: ஸ்டன்னர் ஷ்யாம்
பாடல் வரிகள்: ‘கவிப் பேரரசு’ வைரமுத்து, கங்கை அமரன், பா.விஜய், ஏகாதேசி
ஆடை வடிவமைப்பு: வி.மூர்த்தி
ஒலி வடிவமைப்பு: டி. உதய குமார் (நாக் ஸ்டுடியோஸ்)
ஒப்பனை: ஏ.பிச்சுமணி
ஸ்டில்ஸ்: மஞ்சு அதித்யா
இணை தயாரிப்பாளர்கள்: கே. ஸ்ரீவாசன் நிரஞ்சன் (பண்ணை பிரதர்ஸ்)
நிர்வாக தயாரிப்பாளர்: வீர சங்கர்
தயாரிப்பாளர்கள்: டாக்டர். டி. அருளானந்து, மாத்வோ அருளானந்து
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்
இயற்கை எழில் சூழ்ந்த தேனி மாவட்டத்தில், ராணுவத்தில் பணிபுரியும் கணவனுக்கு துரோகம் செய்து இரண்டு குழந்தைகளான செல்லதுரையின் (ஏகன்) மற்றும் சுதா (சத்யா), தவிக்கவிட்டு தனக்கு விருப்பமான வாழ்க்கையைத் தேடி ஓடிவிடுகிறார் அம்மா (ஐஸ்வர்யா தத்தா). இதனால் கோபப்படும் செல்லதுரையின் தந்தை இரண்டு குழந்தைகளையும் பாட்டி பொறுப்பில் விட்டுவிட்டு அவரும் தன் வாழ்க்கையை பார்த்துக் கொண்டு தனியாக சென்று விடுகிறார். பாட்டியும் கொஞ்ச நாளிலேயே இறந்து போக, கைவிடப்பட்ட செல்லதுரைக்கும் அவன் தங்கைக்கு ஆதரவாக இருக்கிறார் அந்த ஊரில் கோழிப்பண்ணை வைத்திருக்கும் மாமா பெரியசாமி (யோகி பாபு). தாய் செய்த காரியத்தால், சமூக இழிவை எதிர் நோக்கும் செல்லதுரை மாமா பெரியசாமியின் கோழிப்பண்ணை மற்றும் இறைச்சிக் கடையில் வேலை பார்த்து கடின உழைப்பாளி இளைஞராக வாழ்க்கை நடத்துகிறான். கடந்த கால பிரச்சனையை நினைவில் கொண்டு செல்லதுரை, கல்லூரிக்குச் செல்லும் அவரது சகோதரி சுதா மீதான அவரது பாசம் மற்றும் எச்சரிக்கையான பாதுகாப்புடன் இருந்து வருகிறார். இதனிடையே இறைச்சிக் கடை எதிரில் கடை வைத்திருக்கும் தாமரைச்செல்வி (பிரிகிடா) செல்லதுரையை ஒரு தலையாக காதலிக்கிறார். இன்னொரு பக்கம் கல்லூரிக்கு சென்று படிக்கும் தங்கைக்கு காதல் வருகிறது. சுதாவின் வளரும் காதலை செல்லதுரை கண்டறிந்ததும், அம்மாவைப் போல தங்கையும் தனக்கு அவமானத்தைத் தேடி தரப் போகிறாள் எனக் கோபப்படுகிறான். இதன் பிறகு, தங்கை சுதா என்ன முடிவு எடுக்கிறார்? அண்ணன் தங்கையின் காதலை ஏற்றுக் கொண்டாரா? மேலும் அவர்களது பிரிந்த பெற்றோர்களின் எதிர்பாராத சந்திப்பால் நிகழ்ந்து என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகன் ஏகன் தனது கதாபாத்திரத்திற்கு உணர்ச்சிகரமான நடிப்பைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார்.
தங்கை கதாபாத்திரத்தில் வரும் சத்யா தனது பாத்திரத்திற்கு நம்பகத்தன்மையை கொண்டுவருகிறார்.
செல்லதுரையின் காதலியாக பிரிகிடாவின் கதாபாத்திரம் பெரிய அளவில் மெருகேற்றப்பட வில்லை.
யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் படம் முழுக்க பயணித்து நேர்த்தியான நடிப்பு தந்துள்ளார்.
ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, லியோ சிவகுமார், பவா செல்லதுரை, மானஸி கொட்டாச்சி உட்பட அனைவரும் வந்து போகிறார்கள்.
இசை: என்.ஆர். ரகுநந்தன், ஒளிப்பதிவு: அசோக்ராஜ், எடிட்டர்: ஸ்ரீகர் பிரசாத், கலை இயக்குனர்: ஆர்.சரவணா அபிராமன் ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு வலு இல்லாத திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்த முடியாமல் தத்தளிக்கிறது.
பாசத்தின் வலிமையும் மனிதநேயத்தின் அவசியத்தையும் வலியுறுத்தி கிராம பின்னணியிலான படங்கள் பல வெள்ளித்திரையில் மாபெரும் வெற்றி கண்டு உள்ளது. ஆனால் மண் மணம் மாறாமல், தமிழ் சமூகத்தில் உறவுகளுக்கு இருக்கும் முக்கியத்துவத்தின் பின்னணியில், அண்ணன் – தங்கை இடையிலான பாசம், அழுத்தமாக உணர்த்தும் படியான விஷயங்கள் திரைக்கதையில் இல்லாததால் இது இயக்குநர் சீனு ராமசாமியின் படமா என்ற கேள்வியை எழுப்புகிறது.
மொத்தத்தில் விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி.அருளானந்து தயாரித்திருக்கும் கோழிப்பண்ணை செல்லதுரையில் சீனு இராமசாமி அவர்களின் அக்மார்க் முத்திரை காண முடியாதது பார்வையாளர்களுக்கு பெரும் ஏமாற்றம்.