(Kadaisi Ulaga Por) கடைசி உலகப்போர் விமர்சனம் : உலகப்போர் மனிதாபிமானமே இறுதித் தீர்வு – ஆக்ஷன், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகள் நிறைந்த உலகத் தரமான திரைப்படம் | ரேட்டிங்: 3/5

0
404

கடைசி உலகப்போர் விமர்சனம் : உலகப்போர் மனிதாபிமானமே இறுதித் தீர்வு – ஆக்ஷன், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகள் நிறைந்த உலகத் தரமான திரைப்படம் | ரேட்டிங்: 3/5

நடிகர்கள்: ஹிப்ஹாப் ஆதி, நாசர், நட்டி (நடராஜ்), அனகா, அழகம் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, கல்யாண் மாஸ்டர், இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர், இளங்கோ குமணன், ஷாரா, வினோத் ஜி.டி, குகன் பிரகாஷ், அலெக்ஸ், ராக்கெட் ராஜேஷ், சூ கோய் ஷெங் மற்றும் பலர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :
இயக்கம் : ஹிப்ஹாப் ஆதி
இசை: ஹிப்ஹாப் ஆதி
ஒளிப்பதிவாளர்: அர்ஜுன்ராஜா
எடிட்டர்: பிரதீப் இ ராகவ்
ஸ்டண்ட் இயக்குனர்: மகேஷ் மேத்யூ
கலை இயக்குனர்: ஆர்.கே.நாகு
டிஐ : இன்ஃபினிட்டி மீடியா
டிரெய்லர் எடிட்: அருண்
விளம்பர வடிவமைப்பாளர்: சிவகுமார் எஸ் (சிவாடிஜிட்டல் ஆர்ட்)
வண்ணம்: சண்முக பாண்டியன் எம்
நிர்வாகத் தயாரிப்பாளர்: வாசுதேவன் ஆர்
தயாரிப்பு மேலாளர்: டி.என். கோகுல்நாத், எஸ்.பார்த்திபன்
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: சி. ஹரி வெங்கட்
ஆடை வடிவமைப்பாளர்: கீர்த்திவாசன்
பாடல் வரிகள்: ஹிப்ஹாப் ஆதி, விக்னேஷ் ஸ்ரீகாந்த், ஃபோட்டி செவன், சிவவாக்கியர்
ஒலி வடிவமைப்பு: ராகவ் ரமேஷ், ஹரி பிரசாத் எம்.ஏ
கலவை பொறியாளர்: தபஸ் நாயக்
விஷ{வல் எஃபெக்ட்ஸ்: 85 எஃப் எக்ஸ்:
மக்கள் தொடர்பு : சதீஷ் எஸ்2 மீடியா
கோர் டைரக்ஷன் டீம்: ஹட்சன் சாமுவேல் பிரின்ஸ் (இணை இயக்குனர்), பாரத் பாலாஜி, நிதிஷ், ஜே.பி.
தயாரிப்பு: ஹிப்-ஹாப் தமிழா எண்டர்டெயின்மென்ட்

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரின் கண்ணோட்டத்தில் கடைசி உலகப் போரைப் பார்க்கிறோம். இது 2028; மூன்றாம் உலகப் போர் நடந்து கொண்டிருக்கிறது, உலகப் பொருளாதாரம் முற்றிலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதே நேரத்தில், சீனா, ரஷ்யா மற்றும் சில நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து வெளியேறி ரிபப்ளிக் என்ற மற்றொரு சர்வதேச அமைப்பை உருவாக்கியுள்ளன. இது ஐக்கிய நாடுகள் சபைக்கு சவாலாக உள்ளது. ரிபப்ளிக் நாட்டிற்கு அடிபணிய மறுக்கும் இந்தியா கோபத்தை சந்திக்க வேண்டியுள்ளது. அந்த நேரத்தில் தமிழ்நாட்டு அரசியலில் முதலமைச்சரின் (நாசர்) மச்சான் நடராஜ் (எ)நட்டி, தன்னை கிங் மேக்கர் என்று சொல்லிக்கொண்டு ஊழல் கேமில் காய்களை சாமர்த்தியமாக நகர்த்தி கொண்டிருக்கிறார். ஐ.நா சபையின் ஆயுதப் பயிற்சி சிறப்புப் பிரிவு அதிகாரியாக இருக்கும் தமிழரசன் (ஹிப்ஹாப் ஆதி) முதல்வரின் மகள் கீர்த்தனாவை (அனகா) வனவிலங்கு தாக்குதலிலிருந்து காப்பாற்றுகிறார், இருவருக்கும் காதல் மலர்கிறது. முதல்வரின் வற்புறுத்தலின் பேரில் கல்வி அமைச்சராக பதவி ஏற்கும் கீர்த்தனா, எளியவருக்கும் கல்வியைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற திட்டத்தை வெளியிடுகிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடராஜ், கமிஷனுக்காக துறைமுகத்தில் முடங்கியிருக்கும் சர்வதேச பொருளை வெளியே எடுக்க தமிழ்நாட்டில் கலவரத்தைத் தூண்டுகிறார். இதில் ஹிப்ஹாப் ஆதி தீவிரவாதி என கைது செய்யப்படுகிறார். நாட்டில் அவசர காலம் அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் ரிபப்ளிக் நாடுகள், இந்தியாவை கொடூரமாக தாக்குகின்றன. குடியரசு இந்தியாவை கைப்பற்றி, கொடூரமாக சித்திரவதை செய்வதன் மூலம் குடிமக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தும் போது, இந்தியாவின் மீது வலுக்கட்டாயமாக கட்டுப்பாட்டை அடைய முயற்சிக்கிறது. அதிலிருந்து தமிழரசன் தன் சகாக்களுடன் தப்பித்து மூன்றாம் உலகப் போரை உலகின் ‘கடைசி உலகப் போர்’ ஆக எப்படி மாற்றுகிறார் என்பதே படத்தின் கதை.

கதாநாயகன் ஹிப்ஹாப் தமிழா அதி நுட்பமான ஹீரோயிசத்தை முயற்சி செய்திருக்கிறார். இருப்பினும் திரைக்கதையில் அவரது கதாபாத்திரம் பலவீனமாக உள்ளது. இருப்பினும், தமிழரசனாகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கடைசி உலக போர் மூலம், தமிழ் பார்வையாளர்களுக்கு புதிய வடிவிலான கதை சொல்லல் ஈர்க்க கூடியதாக இருந்தது. வழக்கமான தமிழ் சினிமா டெம்ளேட் களை உடைத்து, வித்தியாசமான முயற்சியில் இறங்கி, குறைவான பட்ஜெட்டில் தரமான விஎஃப்எக்ஸ் -க்கு முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாதித்து காட்டி உள்ளார். அதற்காக ஹிப்ஹாப் ஆதிக்கு பாராட்டு தெரிவிக்கலாம்.

மேலும், தானே எழுதி இயக்கியுள்ள படத்தில் தன்னைவிட கிங் மேக்கர் கதாபாத்திரத்துக்கு திரையை அதிகம் பகிர்ந்தது தமிழ் சினிமாவில், இது ஒரு ஆரோக்கியமான விஷயம்.
நடராஜ் கதாபாத்திரத்தில், தனக்கே உரிய ஸ்டைலில் நட்டி(எ) நட்ராஜ் நக்கலான பேச்சு, நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது.

ரைசிங் ஸ்டார் ரிஷிகாந்தாக ஷாரா மற்றும் புலிப்பாண்டியாக அழகம் பெருமாள் ஒரு சில இடங்களில் நகைச்சுவையுடன் திரைக்கதையை நகர்த்துகிறார்கள்.

நாசர், அனகா, ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, கல்யாண் மாஸ்டர், இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர், இளங்கோ குமணன், வினோத் ஜி.டி, குகன் பிரகாஷ், அலெக்ஸ், ராக்கெட் ராஜேஷ், சூ கோய் ஷெங் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டு ஹிப்ஹாப் ஆதியின் புதிய முயற்சிக்கு வலு சேர்த்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் அர்ஜுன் ராஜா, கலை இயக்குனர் ஆர்.கே.நாகா, படத்தொகுப்பு பிரதீப் இ.ராகவ். ஸ்டண்ட் அமைப்பு மகேஷ் மேத்யூ, இசை மற்றும் பின்னணி இசை ஹிப்ஹாப் ஆதி உட்பட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் ஒன்றிணைந்து ஒரு ஹாலிவுட் திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை உருவாக்கி உள்ளனர்.

மொத்தத்தில் ஹிப்-ஹாப் தமிழா எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள கடைசி உலகப்போர் மனிதாபிமானமே இறுதித் தீர்வு – ஆக்ஷன், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகள் நிறைந்த உலகத் தரமான திரைப்படம்.