ஜெய் விஜயம் சினிமா விமர்சனம் : ஜெய் விஜயம் கதையின் கரு பலமாக இருந்த போதிலும், ஒரு தரம் பார்க்கலாம் | ரேட்டிங்: 2/5

0
152

ஜெய் விஜயம் சினிமா விமர்சனம் : ஜெய் விஜயம் கதையின் கரு பலமாக இருந்த போதிலும், ஒரு தரம் பார்க்கலாம் | ரேட்டிங்: 2/5

ஜெய்சதீஷன் நாகேஸ்வரன் இயக்கி ஜெய் ஆகாஷ், அக்ஷயா கந்தமுதன், மைக்கேல் அகஸ்டின் மற்றும் அட்சயா ரே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ஜெய் விஜயம்.

முக்கியமான கதாபாத்திரத்தில் ஏசிபி ராஜேந்திரன் நடித்துள்ளார்.

இசை – சதிஷ் குமார், சீனிவாச குமார்
ஒளிப்பதிவு – பால்பாண்டி
எடிட்டிர்-அழகன்மணிகண்டன்
இயக்கம் – ஜெய்சதீஷன் நாகேஸ்வரன்
தயாரிப்பு – ஜெய் ஆகாஷ்
Pro – வேலு

Hallucination (மாய காட்சி) நோயால் நினைவாற்றலை இழந்த ஜெய் ஆகாஷ் (ஜெய்) போலீஸ் ஸ்டேஷன் சென்று தன் அப்பா, மனைவி, தங்கை என்று சொல்லும் மூவரும் தன்னை கடத்தி வைத்திருப்பதாகவும், அவர்கள் என் உண்மையான சொந்தங்கள் இல்லை. தன்னை ஏமாற்றுகிறார்கள் என்று குழம்பி போய் சொல்ல கதை அங்கிருந்து ஃபிளாஷ் பேக் -ல் ஆரம்பம் ஆகிறது.

ஜெய், அவரது மனைவி (அக்ஷயா கந்தமுதன்) அப்பா, தங்கை ஆகிய நால்வரும் ஒரு புது வீட்டிற்கு குடியேருகிறார்கள்… இரவு தூங்கும் நேரத்தில் மாடியில் ஏதோ சப்தம் கேட்க சென்று பார்க்கையில், அங்கு யாரும் இல்லை… மாய தோற்றம் தான் என்று மனைவி சொல்ல….. இப்படி தினமும் தொடரும் தருவாயில் நாயகனான ஜெய்க்கு சந்தேகம் எழுகிறது. தொடர்ச்சியாக மனைவியும் தங்கையும் சேர்ந்து, தன்னை ஏமாற்றுகிறார்கள் என்றும் அப்பா என்று சொல்லும் அப்பாவும் உண்மையில்லை என்று தெரிந்து அதிர்ந்த ஜெய்க்கு, நீ ஒரு கொலைகாரன் என்று சொல்ல, உண்மையில் ஜெய் யார்? அவர் யாரை கொலை செய்தார்? அப்பா மனைவி தங்கை என்று நடிக்கும் மூவரும் யார்? இறுதியாக Hallucination நோயில் இருந்து வெளி வந்தாரா என்பதே ஜெய் விஜயம்…

ஜெய் யாக வரும் ஜெய் ஆகாஷ் காதல், டூயட், சண்டை காட்சி என்று எந்த இடத்திலும் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் அளவாக நடிச்சிருக்காரு..

நாயகி அக்ஷயா குடுத்த கதாபாத்திரத்தை ஏற்று நிறைவாக நடிசிருக்காங்க.

படத்தின் ஆரம்பத்திலிருந்து ஆத்மாவிற்கென்று புகையாக வடிவம் கொண்டு அமைச்சுருக்காரு இயக்குனர்.

மொத்தத்தில் ஜெய் ஆகாஷ் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் ஜெய் விஜயம் கதையின் கரு பலமாக இருந்த போதிலும், ஒரு தரம் பார்க்கலாம்.