இ-மெயில் சினிமா விமர்சனம் : இ-மெயில் அனைத்து ஆன்லைன் கேமில் ஆர்வம் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை மணி | ரேட்டிங்: 2.25/5

0
267

இ-மெயில் சினிமா விமர்சனம் :

இ-மெயில் அனைத்து ஆன்லைன் கேமில் ஆர்வம் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை மணி | ரேட்டிங்: 2.25/5

நடிகர்கள் :
ராகினி திவேதி, அசோக் குமார், ஆதவ் பாலாஜி, ஆர்த்தி ஸ்ரீ, மனோபாலா, லொள்ளு சபா மனோகர், பெல்லி முரளி பார்க், அக்ஷய் ராஜ், வனிதா, ஆரஞ்சு மிட்டாய் பிரபா, ரத்னா, ஷைலு, ஸ்வேதா, தேஜஸ்வினி, தியா, அஜித் குமார்

தொழில்நுட்ப கலைஞர்கள் :
இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் – எஸ்.ஆர்.ராஜன்
இசை – அவினாஷ் கவாஸ்கர்,
பின்னணி இசை – ஜூபின்
ஒளிப்பதிவு – செல்வம் மாதப்பன்
ஸ்டண்ட் – மாஸ் மதா
தயாரிப்பாளர் எஸ்.ஆர்.ராஜன்
தயாரிப்பு நிறுவனம் – எஸ்ஆர் பிலிம் ஃபேக்டரி
மக்கள் தொடர்பு : ஏ.ஜான்

பணத்தேவையில் இருக்கும் அபி (ராகினி திவேதி) ஆன்லைன் கேமில் ஆர்வம் உள்ள அபி எளிதாக பணம் பெற DIE GAME என்ற ஆன்லைன் கேம் மை விளையாடத் தொடங்குகிறார். இதனிடையே விமல் (அசோக்) அபியை காதலித்து திருமணம் செய்து இயல்பான வாழ்க்கையை நடத்தி வருகிறார். பணத்தேவையில் இருக்கும் அபிக்கு DIE GAME  ஆடுவதன் மூலம் தொடர்ந்து பணம் கிடைக்கிறது. இந்த ஆன்லைன் கேம் பணத்தைப் பெருக்கும் போது, அது உற்சாகமளிக்கும் மற்றும் போதைப் பொருளாக மாறுகிறது. கேமில் ஆர்வம் உள்ள அபிக்கு அதன் மூலம் ஒரு பிரச்சனை வருகிறது.  ஒரு விபரீத விளையாட்டை ஆட வேண்டிய கட்டாயத்தில் அபி தள்ளப்படுகிறாள். ஒரு கட்டத்தில், இது ஒரு விளையாட்டு அல்ல என்பதை அபி புரிந்து கொள்வதற்குள் அவள் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது. இந்நிலையில் அவளுடைய நண்பர்கள் மற்றும் அவளுடைய கணவன் விமல் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை தீர்க்க நினைக்கும் அபி, தனது தோழிகள் உதவியுடன் அதை எதிர் கொள்கிறார்? அப்போது அவர் எதிர்பாராத அதிர்ச்சி அவருக்கு காத்திருக்கிறது. அந்த அதிர்ச்சி என்ன? அபி எதிர்கொள்ளும் பிரச்சனை என்ன? என்பது பல திருப்பங்களுடன் இமெயில் நகர்கிறது.

ராகினி திவேதியின் அபி கதாபாத்திரம் தெளிவாக சித்தரிக்க பட வில்லை. இருந்தாலும் நடிப்பில் அசத்தியுள்ளார். ஸ்டண்ட் மாஸ்டர் மாஸ் மதா ராகினி திவேதிக்கு என்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சண்டைக்காட்சிகளில் தூள் கிளப்புகிறார்.

அசோக் குமார் முடிந்த அளவுக்கு மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்த முயற்சித்துள்ளார்.

ஆதவ் பாலாஜி, ஆர்த்தி ஸ்ரீ, மனோபாலா, லொள்ளு சபா மனோகர், பெல்லி முரளி பார்க், அக்ஷய் ராஜ், வனிதா, ஆரஞ்சு மிட்டாய் பிரபா, ரத்னா, ஷைலு, ஸ்வேதா, தேஜஸ்வினி, தியா, அஜித் குமார் ஆகியோர் தங்கள் பங்கை நிறைவாக செய்திருக்கின்றனர்.

எம்.செல்வத்தின் ஒளிப்பதிவு கலர்புல்லான காட்சி கோணங்கள் சிறப்பாக உள்ளது. மேலும் ஸ்டண்ட் மாஸ்டர் மாஸ் மதா சண்டை காட்சியை அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
கவாஸ்கர் அவினாஷ் இசை மற்றும் ஜுபினின் பின்னணி இசை பலவீனமான திரைக்கதைக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

கதைக்களம் ஒரு சாதாரண குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் ஏற்படும் ஆபத்துகளை மையப்படுத்தி, திரைக்கதையில் ஆச்சரியமான ட்விஸ்ட் வைத்து சொல்லியிருக்கும் இயக்குநர் எஸ்.ஆர்.ராஜன் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் படம் த்ரில்லிங்கா இருந்திருக்கும்.

மொத்தத்தில் எஸ்ஆர் பிலிம் ஃபேக்டரி தயாரித்திருக்கும் இ-மெயில் அனைத்து ஆன்லைன் கேமில் ஆர்வம் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை மணி.