சிக்லெட்ஸ் சினிமா விமர்சனம் : சிக்லெட்ஸ் காதல் மற்றும் காமத்துக்கு வித்தியாசம் தெரியாத டீன் ஏஜ் பருவத்தினருக்கு நல்ல மெசேஜ் சொல்லும் படம் | ரேட்டிங்: 3/5

0
181

சிக்லெட்ஸ் சினிமா விமர்சனம் : சிக்லெட்ஸ் காதல் மற்றும் காமத்துக்கு வித்தியாசம் தெரியாத டீன் ஏஜ் பருவத்தினருக்கு நல்ல மெசேஜ் சொல்லும் படம் | ரேட்டிங்: 3/5

எஸ்எஸ்பி பிலிம்ஸ் சார்பில் எஸ் ஸ்ரீனிவாசன் குரு தயாரித்துள்ள சிக்லெட்ஸ் படத்தில் சாத்விக் வர்மா, நயன் கரிஷ்மா, சுரேகா வாணி, ஸ்ரீமன், மனோபாலா, ஜாக் ராபின்சன், அம்ரிதா, மஞ்சிரா, ராஜ கோபால், ரசீம் உட்பட பலர் நடித்துள்ளனர்.  

தொழில்நுட்ப கலைஞர்கள் :
ஒளிப்பதிவு: கொளஞ்சி குமார்
இசை: பால முரளி பாலு
படத்தொகுப்பு: விஜய் வேலு குட்டி
இயக்கம்: முத்து
மக்கள் தொடர்பு : யுவராஜ்

ரியா (நயன் கரிஷ்மா), அனுஷா (அம்ரிதா ஹல்டர்), அம்பி (மஞ்சீரா) ஆகிய மூவரும் பள்ளி பருவத்திலிருந்தே இருந்தே நெருங்கிய தோழிகள். விதவை அம்மா கீர்த்தி (சுரேகா வாணி) தன் மகள் ரியா மருத்துவராக விரும்புகிறாள், ஐயர் (ராஜகோபால்) தன் மகள் அம்பி ஒரு நாள் அரசாங்கப் பணியில் சேருவார் என்று நம்புகிறார். வணிகத்தில் சிறந்து விளங்கும் சந்தோஷ் (ஸ்ரீமன்) தனது மகள் அனுஷாக்காக எதையும் செய்யக் கூடியவர். மகள் மீது அதீத பாசம் வைத்திருக்கிறார். இந்நிலையில், மது பழக்கம், போதை பழக்கம், புகைப் பழக்கம் என்று சூழலும் இன்றைய இளைய தலைமுறைகள் ஒரு பக்கம் சீரழிந்து கொண்டு இருக்கும் வேளையில், பள்ளி படிப்பை முடித்துவிட்டு இளமைப் பருவத்தில் நுழைந்து தங்கள் பாலியல் ஆசைகளை பற்றிய சிந்தனையில் ஆர்வமாக இருக்கும் கல்லூரியில் சேர்வதற்காக காத்து இருக்கும் ரியா, அனுஷா, அம்பி, மூவரும் அந்த பருவத்தில் காதல் மற்றும் காமத்தைப் பற்றிய வித்தியாசம் தெரியாத அவர்கள் தங்களுக்கு பிடித்தமான ஒரு வாழ்க்கையை வாழ நினைக்கிறார்கள். மூவரும் மனம் போகும் போக்கில் தங்களது ஆண் நண்பர்கள் வருண் (சாத்விக் வர்மா), சிக்கு (ஜேக் ராபின்சன்), ஆரோன் (ரசீம்) ஆகிய நண்பர்களுடன் சுற்றித்திரிந்து ஒரு விருந்தில் தங்கள் முதல் பாலியல் அனுபவத்தைப் பெற திட்டமிட்டு  ஒரு பார்ட்டி ஒன்றுக்கு  செல்ல ஏற்பாடு செய்கிறார்கள். இந்த மூன்று பேரும் தங்களுடைய தோழியின் சகோதரி திருமணத்திற்கு செல்வதாக வீட்டில் பொய் சொல்லிவிட்டு, தங்களுடைய ஆண் நண்பர்களுடன் ஒரு பார்ட்டிக்கு செல்கின்றனர். அவர்கள் பார்ட்டிக்கு கிளம்பி சென்ற பிறகு தான் மூவரின் செயல்கள் அவர்களின் பெற்றோர்களுக்கு  தெரிய வருகிறது. பதட்டம் அடையும் பெற்றோர்கள் மூவரையும் தேடி செல்கின்றனர். இந்நிலையில் ஆண் நண்பர்களுடன் சென்ற அந்த மூன்று பெண்கள் என்ன ஆனார்கள்? பெற்றோர்கள் அவர்களது மகள்களை தேடி கண்டுபிடித்து தவறு நடப்பதற்குள் தடுத்து நிறுத்தினார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர் ஸ்வாக் மற்றும் ஸ்டைல் லுக்கில் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த இளமை நாயகிகளின் உடல்மொழியும், ஆடை குறைப்பும், இரட்டை அர்த்தத்தில் பேசும் டயலாக் காம நொடியில் இளைஞர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கிறது.

ஆண் நண்பர்களாக சாத்விக் வர்மா, ஜேக் ராபின்சன், ரசீம் ஆகியோரின் நடிப்பு இன்றைய 2கே கிட்ஸ் பிரதிபலிப்பதாக தங்கள் கதாபாத்திரத்தை கொண்டு சென்று இருக்கிறார்கள்.

பெற்றோர்களாக சுரேகா வாணி, ஸ்ரீமன், ராஜகோபால் மூவரும் முக பாவனை மூலம் உள்ளத்தில் எழும் பதற்றத்தை எதார்த்தமாக வெளிப்படுத்தி தங்கள் பாத்திரங்களை குறைவில்லாமல் நிறைவேற்றி படத்தின் தரத்தை மெருகேற்றி உள்ளனர்.

பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அடல்ட் காமெடிக்கு, தொழில்நுட்ப கலைஞர்கள் ஒளிப்பதிவு: கொளஞ்சி குமார், இசை: பால முரளி பாலு, படத்தொகுப்பு: விஜய் வேலுகுட்டி ஆகியோரின் பங்களிப்பு விறுவிறுப்பான திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளது.

குழந்தை பருவத்தில் இருந்து டீன் ஏஜ் பருவத்திற்கு நுழையும் போது ஏற்படும் பாலியல் ஆசைகளால் நிலைதடுமாறி போகும் ஒரு சில டீன் ஏஜ் பெண் குழந்தைகள், மற்றும் பெண் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களின் போராட்டங்களை கருவாக கொண்டு காமத்தை தூண்டும் இரட்டை அர்த்த வசனங்களுடன், நல்ல மெசேஜ் ஒன்றை வைத்து திரைக்கதை அமைத்து ஆபாசம் இல்லாமல் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் முத்து.

மொத்தத்தில் எஸ்எஸ்பி பிலிம்ஸ் சார்பில் எஸ் ஸ்ரீனிவாசன் குரு தயாரித்துள்ள சிக்லெட்ஸ் காதல் மற்றும் காமத்துக்கு வித்தியாசம் தெரியாத டீன் ஏஜ் பருவத்தினருக்கு நல்ல மெசேஜ் சொல்லும் படம்.