பூமர் அங்கிள் சினிமா விமர்சனம் : பூமர் அங்கிள் – ஏமாற்றம் | ரேட்டிங்: 1.5/5

0
197

பூமர் அங்கிள் சினிமா விமர்சனம் : பூமர் அங்கிள் – ஏமாற்றம் | ரேட்டிங்: 1.5/5

அங்க மீடியா தயாரித்து ஏவிஎஸ் என்டர்டெயின்மென்ட் எஸ்எஸ் பிரபு வெளியிட்டிருக்கும் பூமர் அங்கிள் படத்தை இயக்கியிருக்கிறார் சுதேஷ் எம்.எஸ்.

நடிகர்கள் : யோகி பாபு, ஓவியா, ரோபோ சங்கர், எம்.எஸ். பாஸ்கர், சேசு, பாலா, தங்கதுரை, சோனா, மதன்பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் : எழுதியவர் : தில்லை, ஒளிப்பதிவாளர்: சுபாஷ் தண்டபானி, எடிட்டர்: இளையராஜா எஸ், இசை: சாந்தன் மற்றும் தர்ம பிரகாஷ், கலை இயக்குனர்: பி ஏ ஆனந்த், சண்டைக்காட்சிகள்: சுரேஷ், ஆடை வடிவமைப்பாளர்: ரெபேக்கா மரியா, மக்கள் தொடர்பு -ஏ. ஜான்.

நேசம் (யோகி பாபு) மற்றும் அவரது மனைவி, எமி என்ற வெளிநாட்டவர், விவாகரத்து ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக புறக்கணிக்கப்பட்ட அவரது மூதாதையர் கோட்டைக்கு செல்கின்றனர். நேசத்தின் தந்தையின் அறிவியல் ரகசியங்களை திருடுவது எமியின் நோக்கம். அதே நேரத்தில் அந்த கிராமத்தில் 4 நண்பர்கள் (கே.பி.ஒய். பாலா, சேசு, ரோபோ சங்கர், தங்கதுரை) நேசத்தை பழிவாங்கவும் கொல்லவும் வெறி கொண்டுள்ளனர், ஏனென்றால் தங்கள் நற்பெயரை கெடுத்ததற்காக அவரைப் பழிவாங்க காத்திருக்கிறார்கள், அத்துடன் அவர்கள் இன்னும் திருமணம் நடைபெறாததற்கு முன்னாள் நண்பன் நேசம் தான் காரணம். ஓவியாவின் ஹாலோகிராம் படத்தில் நுழைந்ததும், ரோபோ ஷங்கரின் தலையுடன் எமி ஒரு ‘ஃபிராங்கன்-ஹல்க்” அரக்கனை கட்டவிழ்த்து விடும் போது, எமியின் உள்நோக்கத்தை நேசம் உணர்கிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

யோகி பாபுவின் நகைச்சுவை திறமைகளை முற்றிலுமாக இந்த கதைக்களம் சொதப்பி விட்டது. மேலும் ரோபோ சங்கர், எம்.எஸ். பாஸ்கர், சேசு, பாலா, தங்கதுரை, மதன்பாபு ஆகியோரின் கோமாளித்தனமான நடிப்பு துளியும் எடுபடவில்லை. ஓவியா சும்மா வந்து போகிறார். சோனா கதாபாத்திரம் சரியாக சித்தரிக்கப்படவில்லை.

ஒளிப்பதிவாளர்: சுபாஷ் தண்டபானி, எடிட்டர்: இளையராஜா எஸ், இசை: சாந்தன் மற்றும் தர்ம பிரகாஷ், கலை இயக்குனர்: பி ஏ ஆனந்த், சண்டைக்காட்சிகள்: சுரேஷ், ஆடை வடிவமைப்பாளர்: ரெபேக்கா மரியா ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு பலவீனமான திரைக்கதையால் முற்றிலும் வீணடிக்கப்பட்டு உள்ளது.

ஹல்க் மற்றும் ஜோக்கர் போன்ற நன்கு அறியப்பட்ட ஹாலிவுட் கதாபாத்திரங்களை கொண்டு குழந்தைகளை கவரலாம் என்று யோசித்த இயக்குனர் சொதப்பல் திரைக்கதை அமைத்து பார்வையாளர்கள் வெறுப்பு அடையும் வகையில் இயக்கியுள்ளார்.

மொத்தத்தில் அங்க மீடியா தயாரித்துள்ள பூமர் அங்கிள் – ஏமாற்றம்.