ப்ளூ ஸ்டார் சினிமா விமர்சனம் : ப்ளூ ஸ்டார் அனைத்து ஸ்போர்ட்ஸ் பிரியர்கள் அவர்கள் கனவு நிஜமாகி வாழ்க்கையில் வெற்றி பெற உற்சாகப்படுத்தும் | ரேட்டிங்: 3.5/5

0
258

ப்ளூ ஸ்டார் சினிமா விமர்சனம் : ப்ளூ ஸ்டார் அனைத்து ஸ்போர்ட்ஸ் பிரியர்கள் அவர்கள் கனவு நிஜமாகி வாழ்க்கையில் வெற்றி பெற உற்சாகப்படுத்தும் | ரேட்டிங்: 3.5/5

நடிகர்கள் :
அசோக் செல்வன், ஷாந்தனு  பாக்யராஜ், பிரித்வி, கீர்த்தி பாண்டியன், பக்ஸ் என்கிற பகவதி பெருமாள், குமரவேல், லிஸ்ஸி ஆண்டனி, டி.என்.அருண்பாலாஜி, திவ்யா துரைசாமி, சஜு நவோதயா.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
பாடலாசிரியர்கள் : உமாதேவி, அறிவு
விளம்பர வடிவமைப்பு : கபிலன்
நடனம் : ஸ்ரீக்ரிஷ்
சண்டைப்பயிற்சி : 
Stunner சாம்
ஆடை வடிவமைப்பு : ஏகன் ஏகாம்பரம்
Sound Mixing : சுரேன் ஜி
கலை இயக்குனர் : ஜெயரகு எல்
படத்தொகுப்பு : செல்வா ஆர்கே
இசை : கோவிந்த் வசந்தா
ஒளிப்பதிவு : தமிழ் ஏ.அழகன்
தயாரிப்பு : ஆர்.கணேஷ் மூர்த்தி, ஜி.சௌந்தர்யா
திரைக்கதை – வசனம் : தமிழ்ப்பிரபா
எழுத்து – இயக்கம் : எஸ்.ஜெயக்குமார்

சென்னையின் புறநகர் பகுதியான அரக்கோணம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு உள்ளூர் கிரிக்கெட் அணிகள் இரண்டு இளைஞர் தலைமையில் ஒன்றுக்கொன்று சண்டையிடுகின்றன. அவர்களில் ஒருவர் காலனி மக்கள் (காலனி பசங்க) அணியை ரஞ்சித் (அசோக் செல்வன்) வழிநடத்துகிறார். ரஞ்சித்தின் அணியில் அவரது சகோதரர் சாம் (பிருத்விராஜன்) உட்பட முழு தலித் வீரர்கள் உள்ளனர் ரஞ்சித் இந்தியாவுக்காக விளையாட விரும்ப வில்லை மாறாக, அவர் தனது காலனி மற்றும் அவரது ப்ளூ ஸ்டார் அணிக்காக விளையாட விரும்புகிறார். அதே நேரத்தில் ரஞ்சித்தின் தந்தை (குமரவேல்) விளையாட்டில் தனது திறமையை நிலைநிறுத்தி ஒரு நல்ல வேலையில் தன்னுடைய மகன்கள் இறங்க வேண்டும் என விரும்புகிறார். அதே சமயம் ராஜேஷ் தலைமையில் ஆல்பா பாய்ஸ் ஊர் தெரு பசங்க (ஆதிக்க சாதியினரால் ஆக்கிரமிக்கப்பட்ட கிராமப் பகுதி மக்கள்) உள்ளனர். ஒரு காலத்தில் ப்ளூ ஸ்டார் அணிக்காக இம்மானுவேல்  (பகவதி பெருமாள்) மிக சிறந்த கிரிக்கெட் வீரராக திகழ்ந்தவர். அவர் ஆடும் போதெல்லாம் புளூ ஸ்டார் அணி எப்போதும் ஆல்பா பாய்ஸ் அணியை தோற்கடிக்கும். ஒரு போட்டியில் ஆல்பா பாய்ஸ் அணி தகராறில் ஈடுபட்டு இம்மானுவேலை காயப்படுத்தி விடுகிறார்கள். அந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த கிராமத்தில் இரு அணிகளும் ஒருவருக்கொருவர் மீண்டும் கிரிக்கெட் போட்டி நடத்த கூடாது என காவல் துறை முடிவு செய்து அமல்படுத்துகிறது. இப்போது MCH பேஸ் அகாடமியில் இந்த மைதானத்தில் புல் வெட்டி அழகுபடுத்தும் மனிதராக வேலை செய்து கொண்டு இருக்கிறார் இம்மானுவேல். மைதானத்தில் யார் முதலில் விளையாட வேண்டும் என்ற சண்டை அடிக்கடி நடக்கிறது. அதற்கு இரு அணிகளும் மீண்டும் போட்டியை நடத்த முடிவு செய்கிறார்கள். ராஜேஷ் தலைமையில் ஆல்பா பாய்ஸ் “எம்சிஎஃப்” கிரிக்கெட் கிளப்பில் உள்ள  சில தொழில்முறை கிரிக்கெட் வீரர்களை பணம் கொடுத்து தங்களது அணிக்காக விளையாட வைக்கிறார்கள். போட்டியின் போது ஆல்பா பாய்ஸ் அணியை இந்த “எம்சிஎஃப்” கிரிக்கெட் கிளப் வீரர்கள் அலட்சியப்படுத்தியும்,  அவமானப்படுத்தவும் செய்கிறார்கள். அதே நேரத்தில் ப்ளூ ஸ்டார் அணியை  தோற்கடி க்கவும் செய்கிறார்கள். தோல்வியை தழுவிய ரஞ்சித் எப்படியாவது மீண்டும் ப்ளூ ஸ்டார் அணியை ஆல்பா பாய்ஸ் அணியுடன் விளையாடி வெற்றிபெற வேண்டும் என்பதே அவரது கனவு. இந்நிலையில் MCH பேஸ் அகாடமியில்  பயிற்சியில் இருக்கும் “எம்சிஎஃப்” கிரிக்கெட் கிளப்பில் உள்ள வீரர்களுக்கு மீதி பணம் கொடுக்க செல்லும் ராஜேஷ் மோசமாக நடத்தப்பட்டு அவமானம் படுத்தப்படுகிறார். அதை கவனித்த ரஞ்சித் MCH பேஸ் அகாடமி பயிற்சியாளருடன் மோதுகிறார். அதன் பின் ப்ளூ ஸ்டார் மற்றும் ஆல்பா பாய்ஸ் ஒரே அணியாக ஒன்றிணைந்து தங்களை நிரூபிப்பதற்காக பெரிய போட்டியில் MCH பேஸ் அகாடமி அணியை எப்படி தோற்கடிக்கிறது என்பதுதான் மீதிக்கதை.
அசோக் செல்வன்,  சாந்தனு பாக்யராஜ், மற்றும் பிருத்விராஜன் மூவரும் நிஜ வாழ்க்கையில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்கள். அவர்களின் கிரிக்கெட் திறமைகள் படத்தில் அவர்கள் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாக பெருந்தியதால் சிறப்பான பங்களிப்பை வழங்க முடிந்தது. மூவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு உறுதியான டையலாக் ஸ்லாங்கை கச்சிதமாக கடைபிடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி திரைக்கதைக்கு மேலும் அழுத்தம் சேர்த்துள்ளனர்.

ஆனந்தி கதாபாத்திரத்தில் கீர்த்தி பாண்டியன் அசோக் செல்வன் காதலியாக மட்டும் இல்லாமல் அவர் கிரிக்கெட் நுட்பங்கள் நன்கு அறிந்து கிரிக்கெட்டில் தீவிரமாக ஈர்க்கப்பட்டவராக அவரது கதாபாத்திரம் அமைந்தது. அந்த பாத்திரத்தில் அழகாக இருப்பதோடு கச்சிதமாகவும் கையாண்டுள்ளார். ஆனால் கீர்த்தி பாண்டியன் ஒரு கட்டத்திற்குப் பிறகு காணாமல் போகிறது கொஞ்சம் வருத்தமே.
இம்மானுவேல் கதாபாத்திரத்தில் பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உடல் மொழியிலும் அழுத்தமான டயலாக் டெலிவரியும் நேர்த்தியாக வெளிப்படுத்தி தன்னுடைய கதாபாத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.


அதே போல குமரவேல், லிஸ்ஸி ஆண்டனி, டி.என்.அருண் பாலாஜி, திவ்யா துரைசாமி, சஜு நவோதயா உள்ளிட்ட அனைவரும் தங்களது பங்களிப்பை அழுத்தமாக பதிவு செய்துள்ளனர்.

கோவிந்த் வசந்தாவின் இசையில் உமாதேவி மற்றும் அறிவின் வரிகளில் பாடல்கள் அற்புதம் மற்றும் பின்னணி இசையும் கிரிக்கெட் போட்டி காட்சிகள் பரபரப்பாக இருக்க கணிசமாக உதவுகிறது.

கலை இயக்குனர் எல்.ஜெய ரகுவின் உழைப்பை, சிறப்பான காட்சி கோணங்கள் மூலம் தமிழ் ஏ அழகனின் ஒளிப்பதிவு பதிவு செய்துள்ளார்.
படத்தொகுப்பாளர் செல்வா சுமு எடிட்டிங் கடைசி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைத்துள்ளது.

கிரிக்கெட்டில் தங்களது திறமையை வெளிப்படுத்த விரும்பும் இளைஞர்கள் எதிர்நோக்கும் அவலத்தையும், அவமானத்தையும் பார்வையாளர்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் வலுவான  திரைக்கதை ப்ளூ ஸ்டார் உறுதியான கதைசொல்லலின் அடித்தளம் இருக்கிறது. மேலும் திரைக்கதைக்கு ஏற்ற உயிரோட்டமான வசனங்களுடன் சரியான ஸ்போர்ட்ஸ் படத்தை படைத்துள்ளார் இயக்குனர் ஜெயக்குமார்.

மொத்தத்தில் ஆர்.கணேஷ் மூர்த்தி, ஜி.சௌந்தர்யா தயாரித்திருக்கும் ப்ளூ ஸ்டார் அனைத்து ஸ்போர்ட்ஸ் பிரியர்கள் அவர்கள் கனவு நிஜமாகி வாழ்க்கையில் வெற்றி பெற உற்சாகப்படுத்தும்.