பிகினிங் விமர்சனம்: பிகினிங் ஒரு புதிய முயற்சியில் ஆரம்ப அத்தியாயம் | ரேட்டிங்: 2.5/5

0
251

பிகினிங் விமர்சனம்: பிகினிங் ஒரு புதிய முயற்சியில் ஆரம்ப அத்தியாயம் | ரேட்டிங்: 2.5/5

லெஃட்டி மேனுவேல் க்ரியேஷன்ஸ் சார்பில் விஜயா முத்துசாமி தயாரிப்பில் வினோத் கிஷன், கௌரி கிஷன், சச்சின், ரோகிணி, லகுபரன், மகேந்திரன், சுருளி, குக்வித்கோமாளி பாலா ஆகியோர் நடித்துள்ளனர்.
பிகினிங் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஜெகன் விஜயா.இசை-சுந்திரமூர்த்தி, ஒளிப்பதிவு-வீரகுமார், எடிட்டர்-சி.எஸ்.பிரேம்குமார், கலை-கே.வி.முருகமணி,நடனம்-தினேஷ், தயாரிப்பு நிர்வாகி-மாரியப்பன் கணபதி, இணை தயாரிப்பு-பிரபாகரன் நாகரத்னம், சுப்ரமணி பிரபாகரன், கோபி அண்ணா, பொன்னி பிரபு, பிஆர்ஒ-ஜான்சன்.

இருவேறு கதைகள் இடது,வலது புறம் பயணிக்க ஸ்ப்ளிட் ஸ்க்ரீன் திரைப்படமாக புதிய முயற்சியோடு ஆசியாவில் முதல் முறையாக பிகினிங் படம் வெளிவந்துள்ளது.
இடதுபுறம் பால சுப்ரமணியம் (வினோத் கிஷன்) ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞரான பாதுகாப்பு காரணங்களுக்காக வேலை செய்யும் அம்மாவால் (ரோகினி) ஒரு அறைக்குள் பூட்டப்பட்டு இருக்கிறார். கார்ட்டூன்களைப் பார்ப்பதிலும், பாத்திரங்களைச் சுத்தம் செய்வதிலும் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்.
வலதுபுறம் தகவல் தொழில்நுட்ப வல்லுநரான நித்யா, தனது பணியிடத்திற்குச் செல்லும் வழியில் முகமூடி அணிந்த மூன்று நபர்களால் கடத்தப்பட்டு, ஒரு சிறிய அறையில் அடைக்கப்படுகிறார்.தப்பிக்க வழியில்லை என்பதை நித்யா புரிந்துகொண்டதும், அறையில் ரேண்டம் நம்பர் உள்ள பழைய போனை கண்டுபிடித்து அழைக்கிறாள்.அந்த நம்பர் பாலசுப்ரமணியுடையது என்பதால் அவருடன் பேசி நித்யா உதவி கேட்கிறார். பாலசுப்ரமணியோ நித்யா சொல்வதை புரிந்து கொள்ளும் மனநிலை இல்லாதவராக இருந்தாலும் ஒரளவு நிலைமையை புரிந்து கொண்டு உதவ முன் வருகிறார். அடுத்து என்ன நடக்கிறது, பால சுப்ரமணியம் நித்யாவிற்கு உதவி செய்தாரா? வில்லன் நித்யாவை என்ன செய்தான்? நித்யா இறுதியில் தப்பித்தாரா? அவருக்கு என்ன ஆனது? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

பால சுப்ரமணியமாக வினோத் கிஷன் குணாதிசயமும், அவரது வாழ்க்கை முறையை சித்தரித்த விதமும் யதார்த்தமாகவும் அழகாகவும் இருக்கிறது. அவருக்கும் நித்யாவிற்கும் இடையேயான தொலைபேசி உரையாடல்கள் உணர்ச்சிகளின் குவியலாக வினோத் கிஷன் கண் முன்னே நிறுத்தியுள்ளார்.

நித்யாவாக கௌரி கிஷன் தைரியமான பெண் என்றாலும் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டு தவிக்கும் கைதியாக தவிக்கும் தவிப்பு, பரிதவிப்பு ஒரு கதையை தன் தோளில் சுமந்து முக்கிய கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார்.

வில்லன் சந்துருவாக சச்சின், தாய் அற்புதமாக ரோகிணி கொடுத்த கதாபாத்திரத்தை திறம்பட செய்துள்ளனர்.மற்றும் லகுபரன், மகேந்திரன், சுருளி, குக்வித்கோமாளி பாலா ஆகியோர் பக்க மேளங்கள்.

சுந்திரமூர்த்தியின் இசை படத்திற்கு கூடுதல் பலம்.

வீரகுமாரின் ஒளிப்பதிவு திரைக்கதையில் முக்கிய பங்களிப்பு படத்திற்கு உயிர் நாடி. இரு கதைகளையும் தன் காட்சிக்கோணங்களால் வித்தியாசப்படுத்தி கொடுத்துள்ளார்.

எடிட்டர்-சி.எஸ்.பிரேம்குமார், கலை இயக்குனர் கே.வி.முருகமணி ஆகியோர் கச்சிதமாக செய்துள்ளனர்.

இடதுபுறம் முழுவதும் ஒரு தாய், மகனைப்பற்றியது, வலதுபுறம் முழுவதும் கடத்தல் கும்பலில் மாட்டிக் கொண்டிருக்கும் பெண்ணை பற்றிது இந்த இரு கதைகளையும் தொலைபேசி மூலம் இணைக்கும் பாலமாக திரைக்கதையமைத்து இறுதியில் ஒரே திரையில் இணையும் வண்ணம் இயக்கியுள்ளார் இயக்குனர் ஜெகன் விஜயா. ஸ்பிலிட் ஸ்கீரின் வடிவில் வந்திருக்கும் இப்படம் புதிய முயற்சி, புதிய தொடக்கம்.

மொத்தத்தில் லெஃட்டி மேனுவேல் க்ரியேஷன்ஸ் சார்பில் விஜயா முத்துசாமி தயாரித்திருக்கும் பிகினிங் ஒரு புதிய முயற்சியில் ஆரம்ப அத்தியாயம்.