அதோமுகம் சினிமா விமர்சனம் : அதோமுகம் உங்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் ஒரு சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் | ரேட்டிங்: 3.5/5
ரீல் பெட்டி மற்றும் தரிகோ பிலிம் ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘அதோமுகம்’.
நடிகர்கள் :
எஸ்.பி சித்தார்த், சைதன்ய பிரதாப், அனந்த் நாக், சரித்திரன், நக்கலைட்ஸ் கவி, வர்கீஸ், பிபின், அருண்பாண்டியன்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
எழுத்து – இயக்கம்: சுனில் தேவ்
ஒளிப்பதிவு: அருண் விஜய்குமார்
இசை: மணிகண்டன் முரளி
பின்னணி இசை: சரண் ராகவன்
கலை இயக்குனர்: சரவணா அபிராமன்
படத்தொகுப்பு: விஷ்ணு விஜயன்
ஒலி வடிவம்: திலக்ஷன் ( Noise Nexus )
ஒலி கலவை: டி.உதயகுமார் ( Knack Studios )
ஒப்பனை: நரசிம்மா, அம்மு பி ராஜ், சுப்ரமணி (அருண் பாண்டியன்)
பாடல்: சுனில் தேவ்
கிராபிக்ஸ்: Fix It In Post Studios
கலரிஸ்ட்: கே.அருண் சங்கமேஸ்வர்
வண்ணம்: Firefox Studios
மக்கள் தொடர்பு – ஆர்.குமரேசன்
காதல் மனைவி லீனா மகாதேவனுக்கு (சைதன்ய பிரதாப்) அவர்களின் திருமண ஆண்டு விழாவில் சர்ப்ரைஸ் கொடுக்க கணவன் மார்ட்டின் (எஸ்.பி சித்தார்த்) யோசனை செய்து தரும் போது அவர் கொடுக்கும் சர்ப்ரைஸ் புஸ் ஆகிவிடுகிறது. எப்படியாவது மனைவி லீனாவுக்கு சர்ப்ரைஸ் தர வேண்டும் என்று தான் வேலை பார்க்கும் டீ எஸ்டேட்டில் பணிபுரியும் ஒரு நபரின் யோசனைப்படி மார்ட்டின் தனது மனைவியை ஆச்சரியப்படுத்த இதைவிட சிறந்த வழி இருக்க முடியாது என்று நம்புகிறார். தனது மனைவி லீனா மொபைல் போனில் ஹிட்டன் ஃபேஸ் என்கிற ஒரு ஸ்பை அப்ளிகேஷன் ஆப் லீனாவுக்கு தெரியாமல் இன்ஸ்டால் செய்கிறார். இந்த செயலி மூலம் அவர் தனது மனைவி என்ன செய்கிறார் என்பதை மொபைல் கேமரா மூலம் பார்க்க முடியும். அவரது ‘அழகான வெளிப்பாடுகளை’ எடிட் செய்து ஒரு ஆச்சரியமான வீடியோவை உருவாக்கி அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க எண்ணி தனது லேப்டாப்பில் உள்ள ஹிட்டன் ஃபேஸ் ஸ்பை அப்ளிகேஷன் மூலம் லீனாவின் முகபாவனைகளை பார்க்கும் போது அதிர்ச்சி அடையும் அசம்பாவிதங்கள் நிகழ்கிறது. அந்த திடுக்கிடும் நிகழ்வுகள் மார்ட்டினின் வாழ்க்கை கொந்தளிப்பில் தள்ளப்பட்டு தலைகீழாக மாறுகிறது. அதன் பின் பல திருப்பங்களுடன் நடப்பதே படத்தின் கதை.
கதையின் நாயகனாக எஸ்.பி சித்தார்த் மார்ட்டின் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி உடல் மொழி மற்றும் முக வெளிப்பாடுகளை நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார்.
அதே போல காதல் மனைவி லீனா மகாதேவனாக கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் சைதன்ய பிரதாப் படம் முழுக்க அப்பாவித்தனம், பாசாங்கு, நீலித்தனம், என அனைத்தையும் கலந்து அற்புதமான நடிப்பு வழங்கியுள்ளார். க்ளைமாக்ஸில், லீனா தாமஸாக அறியப்படும் போது சிறையில் இருக்கும் தன் கணவன் மார்ட்டினிடம் அவர் சரியான குற்றத் திட்டங்களை விவரிப்பதன் மூலம் ஈர்க்கக்கூடிய நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
அனந்த் நாக், சரித்திரன், நக்கலைட்ஸ் கவி, வர்கீஸ், பிபின் உட்பட அனைத்து முக்கிய துணை கதாபாத்திரங்கள் திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளனர்.
இந்திரஜித் பாத்திரத்தில் அருண்பாண்டியன் சிறப்பு தோற்றத்தில் தோன்றுகிறார்.
டெக்னாலஜியுடன் கூடிய சஸ்பென்ஸ் திரில்லருக்கான் தொழில்நுட்ப அம்சங்கள், ஒளிப்பதிவு (அருண் விஜய்குமார), எடிட்டிங் (விஷ்ணு விஜயன்), இசை (மணிகண்டன் முரளி), பின்னணி இசை (சரண் ராகவன்) என ஊட்டி, குன்னூர் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் மலைகள், குளிர் மற்றும் மூடுபனி அனைத்தையும் ஒன்றிணைத்திருப்பது திரைக்கதைக்கு மிகப்பெரிய பலம்.
அதோமுகம் என்ற பழந்தமிழ் வார்த்தைக்கு மறைத்து வைத்திருக்கும் முகம் என்று பொருள். சந்தேகம் மற்றும் சூழ்ச்சியின் ஒரு சிக்கலான வலையில் மனிதர்கள் மறைத்து வைத்திருக்கும் கோர முகங்கள் சில சமயங்களில் வெளிவரும் போது எந்தவிதமான வினோதங்கள், அசம்பாவிதங்கள் ஹிட்டன் ஃபேஸ் ஸ்பை அப்ளிகேஷன் செயலியால் நிகழ்கிறது என்பதை பல திடுக்கிடும் திருப்பங்களுடன் திரைக்கதை விரிவடைகிறது, ரகசியங்கள் உரிக்கப்படுகின்றன, எதிர்பாராத திருப்பங்கள் வெளிப்படுத்துகின்றன மற்றும் பார்வையாளர்களை அவர்களின் இருக்கைகளின் விளிம்பில் வைத்து பாகம் 2 க்கான முன்னணியுடன் புதிய கோணத்தில் படைத்துள்ளார் இயக்குனர் சுனில் தேவ்.
மொத்தத்தில் ரீல் பெட்டி மற்றும் தரிகோ பிலிம் ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்கும் அதோமுகம் உங்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் ஒரு சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர்.