7ஜி சினிமா விமர்சனம் : 7ஜி புதிய கோணத்தில் ஒரு பழைய பேய் கதை | ரேட்டிங்: 2.5/5

0
359

7ஜி சினிமா விமர்சனம் : 7ஜி புதிய கோணத்தில் ஒரு பழைய பேய் கதை | ரேட்டிங்: 2.5/5

ட்ரீம் ஹவுஸ் சார்பில் தயாரித்து 7ஜி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஹாரூன்,
இதில் சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட், ரோஷன் பஷீர், சித்தார்த் விபின், ஸ்நேகா குப்தா, சுப்ரமணியம் சிவா, கல்கிராஜா ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப வல்லுநர்கள்:- ஒளிப்பதிவு: கண்ணா, எடிட்டர்: பிஜு.வி.டான் போஸ்கோ, இசை: சித்தார்த் விபின், ஸ்டண்ட்: ஃபயர் கார்த்திக், மேக் அப்: பி மாரியப்பன், பாடல்கள்: மோகன் ராஜா, குட்டி ரேவதி, பாடகர்கள் : சைந்தவி, பிரியங்கா, ரீட்டா, தியாகராஜன், லோகேஷ், நடன அமைப்பு : ரிச்சி ரிச்சர்ட்சன், தயாரிப்பு நிர்வாகி  : கேஎஸ்கே.செல்வா, தயாரிப்பு மேலாளர் : ஜெகதீஷ், பிஆர்ஒ : சதீஷ் (ஏய்ம்)

ஐடி ஊழியர் ராஜீவ் (ரோஷன் பஷீர்) மற்றும் வர்ஷா (ஸ்ம்ருதி வெங்கட்) அவர்களின் மகன் ராகுலுடன் புதிய அபார்ட்மெண்டில் இல்லற வாழ்க்கையை தனது முன்னாள் காதலி மற்றும் நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ச்சி அடைகிறார்கள். இந்நிலையில், ராஜீவின் முன்னாள் காதலி இந்த மகிழ்ச்சியாக இருக்கும் இந்த தம்பதியினர் மீது பொறாமை கொண்டு, அவரது குடும்பத்தை குழப்பத்தில் தள்ளுவதற்கான திட்டங்களை வகுத்து, தானே சூனியம் செய்கிறாள். புதிய வீட்டிற்குச் சென்ற அடுத்த நாள், ராஜீவ் பதவி உயர்வு பெற்றதால் அதற்கான ஒரு பயிற்சித் திட்டத்திற்கு பெங்களூருக்குச் செல்கிறார். அப்போதுதான் வர்ஷாவும் தன் மகனும் அந்த பிளாட்டில் ஆவிகள் இருப்பதை உணர்கிறார்கள். அமானுஷ்ய சக்திகள், அவர்களின் கனவு இல்லத்தை அச்சுறுத்துவதால், வர்ஷா தனது குடும்பத்தை பாதுகாக்க ஆவிகளை எதிர்கொள்கிறாள். விஷயம் பெரிதாகிய உடன் பக்கத்து வீட்டுக்காரர், சுப்ரமணிய சிவா 7ஜி அபார்ட்மெண்ட்டில் ஏற்கனவே ஒரு விபத்து நடந்தது பற்றி வர்ஷாவிடம் கூறுகிறார். அது என்ன? ஏன் அந்த அமானுஷ்ய சக்திகள் வர்ஷா குடும்பத்தினரை அச்சுறுத்துகிறது? அதே போல முன்னாள் காதலியின் சூனியம் பலித்ததா? இந்த குடும்பம் இருமுனை நெருக்கடியில் இருந்து எப்படி தப்பிக்கிறது  என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

அமானுஷ்ய சக்திகள், அச்சுறுத்தல்கள் மற்றும் இந்தப் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று யோசிக்கும் மனைவி வர்ஷாவாக ஸ்ம்ருதி வெங்கட் தனது பாத்திரத்திற்கு அழுத்தமான நடிப்பை வழங்குகிறார்.

சோனியா அகர்வால் தனது மரணத்திற்கும் மகனின் மரணத்திற்கும் காரணமானவர்களை பழிவாங்காமல் 7ஜி வீட்டை விட்டு வெளியேற மறுக்கும் ஆவி மஞ்சுளாவாக ஒரு சிறந்த நடிப்புடன் பாத்திரத்திற்கு ஆழத்தை கொண்டு வருகிறார்.

சித்தார்த் விபின் வில்லன் கதாபாத்திரத்திற்கு சிறிது அளவு கூட பொருந்தவே இல்லை.

ரோஷன் பஷீர், ஸ்நேகா குப்தா, சுப்ரமணியம் சிவா, கல்கிராஜா உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் திரைக்கதையில் பெரிதாக பயன்படுத்தப்படவில்லை.

ஒளிப்பதிவு: கண்ணா, எடிட்டர்: பிஜு.வி.டான் போஸ்கோ, இசை: சித்தார்த் விபின், ஸ்டண்ட்: ஃபயர் கார்த்திக், மேக் அப்: பி மாரியப்பன், பாடல்கள்: மோகன் ராஜா, குட்டி ரேவதி, பாடகர்கள் : சைந்தவி, பிரியங்கா, ரீட்டா, தியாகராஜன், லோகேஷ், நடன அமைப்பு : ரிச்சி ரிச்சர்ட்சன் ஆகிய தொழில்நுட்ப வல்லுநர்களின் பணி சிறப்பாக உள்ளது.
மற்ற வழக்கமான பழிவாங்கும் பேய் படங்களைப் போல் அல்லாமல், அதே பழிவாங்கும் பேய் கதைக்கு வித்தியாசமான கோணத்தில் சூனியம், நிராகரிக்கப்பட்ட காதல் மற்றும் பழிவாங்கும் ஆவிகள் ஆகியவற்றை இணைத்து ஒரு திகில் திரில்லரை இயக்குனர் ஹாரூன் உருவாக்கியுள்ளார்.
மொத்தத்தில் ட்ரீம் ஹவுஸ் சார்பில் தயாரித்துள்ள 7ஜி புதிய கோணத்தில் ஒரு பழைய பேய் கதை.