3.6.9 திரைப்பட விமர்சனம் : 3.6.9 வித்தியாசமான புது முயற்சி | ரேட்டிங்: 2.5/5

0
144

3.6.9 திரைப்பட விமர்சனம் : 3.6.9 வித்தியாசமான புது முயற்சி | ரேட்டிங்: 2.5/5

சிவ மாதவ் இயக்கத்தில் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘3.6.9’.
81 நிமிடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை 24 கேமராக்களில் ஒளிப்பதிவு செய்ய, 450 தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்க, 75க்கும் மேற்பட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சுகைல், சத்தி மகேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வில்லன் கதாபாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளர் பி.ஜி.எஸ். நடத்துள்ளார்.
ஒளிப்பதிவு மாரிஸ்வரன், இசை கார்த்திக் ஹர்ஷா, படத்தொகுதி ஆர்.கே.ஸ்ரீநாத், கலை இயக்கம் ஸ்ரீமன் பாலாஜி. அறிவியல் பின்னணியில் திரில்லர் திரைப்படமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கிரௌட் பண்ட் எனப்படும் முறையில் பி.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்திருக்கிறது.

தேவாலயத்தில் மக்கள் அன்பை பெற்ற பாதிரியார் பென்னட் கேஸ்ட்ரோ (கே.பாக்யராஜ்) ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டைத் தொடங்குகிறார்.  ஒரு கட்டத்தில் தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்துகொண்டிருக்கும்போது, சைரஸ் (பி.ஜி.எஸ்) என்பவர் தலைமையில் அங்கே மறைந்திருக்கும் கும்பல் துப்பாக்கி முனையில் பக்தர்களைச் சிறைபிடிக்கிறது. பாதிரியாரை மிரட்டுவதுடன், சிலரை சுட்டுக் கொல்கிறார்கள். அவர்கள் எதற்காக தேவாலயத்துக்குள் நுழைந்தனர்? பாதிரியார் பாக்யராஜை எதற்காக மிரட்டுகிறார்கள்? பிறகு பக்தர்களும் மற்றும் பாதிரியார் அவர்களிடமிருந்து தப்பித்தார்களா இல்லையா? என்பதே பரபரப்பு நிறைந்த மீதி கதை.

பாதிரியாராக வரும் பாக்யராஜ், முகத்தில் பல்வேறு பரிமாணங்களை காட்டி தனது அனுபவ நடிப்பில் அசத்துகிறார்.

வில்லனாக பி.ஜி.எஸ். ஸ்டைலாக வலம் வந்து மிரட்டுகிறார். பிளாக் பாண்டி, அங்கயற் கண்ணன், ஆலம் ஷா, நரேஷ், சோகைல், ராஜஸ்ரீ, சக்திவேல், சுபிக்ஷா, கார்த்திக், பிரவீன், ரிஷி ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களுக்கு நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

24 கேமராக்களை பொருத்திய இடங்கள் காட்சிகளில் தெரியாதபடி எடிட் செய்து விறுவிறுப்பாக கதை நகர ஆர்.கே.நாத்தின் படத்தொகுப்பு, இயற்கை எழில் சூழ்ந்த, ஏரிக்கரையின் மீது அமர்ந்துள்ள அழகான தேவாலயத்தை அழகாக படம்பிடித்த மாரீஸ்வரன் மோகன் குமாரின் ஒளிப்பதிவு மற்றும் கார்த்திக் ஹர்ஷாவின் பின்னணி இசை பலம் சேர்த்துள்ளது.

“டெலிபோர்ட்டிசம்” என்கிற  அருமையான எதிர்கால அறிவியல் தொடர்பான காரணிகள் உள்ளீடாக வைத்து, கதைக்களத்தில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவு, உலகை எப்படி அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்ல போகிறது? என்பதை திரைக்கதையாக வடிவமைத்து, 24 கேமராக்கள் கொண்டு வெறும் 81 நிமிடங்களிலேயே படத்தை இயக்கியுள்ள சிவ மாதவ் முயற்சி பாராட்டுக்குரியது. என்றாலும் திரைக்கதையில் கூடுதலாக கவனம் செலுத்தி இருந்தால் படம் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும்.

மொத்தத்தில் பி.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்திருக்கும் 3.6.9 வித்தியாசமான புது முயற்சி.